சுஷாந்த் சிங்கின் கடைசி படம் .. தியேட்டரில் வெளியிட வேண்டும்.. ஏ.ஆர் ரஹ்மான் ட்விட் !

மும்பை: சுஷாந்த் சிங்கின் கடைசி படமான தில் பெச்சாராவை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்ற பல ரசிகர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

ACTRESS MADHOO BALA INTERVIEW | இவங்க மதிப்பு அப்போ தெரில | V-CONNECT | FILMIBEAT TAMIL

பாலிவுட் நகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையில் உள்ள மர்மங்கள் நீண்டு கொண்டே போகிறது. தற்கொலைக்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டு பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பலரின் பாராட்டு

பலரின் பாராட்டு

இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் பல தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வந்துள்ளார் சுஷாந்த் சிங். பின் தனது முதல் திரைப்படமான "கை போ சே"வில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பலரிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்தது.

தோனியின் வாழ்க்கை

தோனியின் வாழ்க்கை

அமிர்கானின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பிகே என்ற படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் விதமாக உருவான எம் எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

மேலும் இந்த தோனி படத்தில் இவரின் சிறந்த நடிப்பை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சில விருது விழாக்களில் இவரது நடிப்புக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சரிவர கிடைக்கவில்லை என்றும் ஒரு சில குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. அவரது தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டு வருகிறது.

ஹிட் அடித்தது

ஹிட் அடித்தது

தோனி படம் இவரின் திரைத்துறை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அதற்கு பின் சுஷாந்த் சிங் நடித்த கேதர்நாத் மற்றும் சிச்சோரே போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து நல்ல பெயரையும் நல்ல பாராட்டுகளையும் இவருக்கு பெற்று வந்தது.

தற்கொலை

தற்கொலை

இந்நிலையில் இவர் கடைசியாக நடித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருந்த திரைப்படமான "தில் பெச்சாரா" வெளியாவதற்கு முன்பே இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரையில் மட்டுமே

திரையில் மட்டுமே

மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான முழுமையான காரணமும் அதில் உள்ள மர்மங்களும் இன்னும் விலகாத நிலையில் இவர் நடித்த கடைசி படமான தில் பெச்சாராவை அவரது ரசிகர்கள் திரையில் மட்டுமே காண விரும்புவதாக பல்வேறு இடங்களில் இருந்தும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆதரவு தரும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தந்துள்ளார்.

கடைசி படம்

கடைசி படம்

சுஷாந்த் சிங்கின் முந்தைய படமான டிரைவ் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவரின் நடிப்பில் கடைசியாக உருவான தில் பெச்சாரா படமும் OTT ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் அவரது கடைசி படமான "தில் பெச்சாரா"வை திரையில் மட்டுமே பாக்க விரும்புவதாக கூறி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் ஏ.ஆர். ரஹ்மானும் அந்த படத்தை திரையிலே காண விரும்புகிறார் என்பது தெரிகிறது.

ரசிகர்களின்

ரசிகர்களின்

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பலரும் இவருக்கு பாராட்டுகளை, ஆதரவையும் சொல்லி வரும் நிலையில் இந்த படம் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா இல்லை OTT-ல் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X