twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது தற்செயலாக நடந்ததல்ல.. மந்திரங்கள் ஓதப்பட்டதால் நடந்தது.. சுஷாந்தின் சகோதரி உருக்கம்!

    |

    மும்பை: சுஷாந்த் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட தற்செயலாக நடந்தது அல்ல என அவரது சகோதரி உருக்கமாக கூறியுள்ளார்.

    Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு நேற்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனால் சுஷாந்தின் குடும்பத்தினர், எப்படியும் அவரது மரணத்திற்கான உண்மை வெளியே வந்துவிடும் என நம்பிக்கையில் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    நான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ!நான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ!

    சகோதரி கருத்து

    சகோதரி கருத்து

    ரசிகர்களும் சுஷாந்த் சிங் மரணத்திற்கான காரணம் விரைவில் வெளி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில் சுஷாந்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்றுக்கொண்டது குறித்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    கடவுளுக்கு நன்றி

    கடவுளுக்கு நன்றி

    அதாவது நேற்ற ராம் மந்திர் பூமி பூஜையுடன் இந்த வழக்கின் முன்னேற்றம் ஒத்துப்போனது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், நீதிக்கான போராட்டத்தில் அவர்களுக்கு உதவிய கடவுளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் செய்தி சேனலில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் சுஷாந்த் வழக்கு செய்தி காட்டப்படும் ஸ்கிரீன் ஷாட்களை ஸ்வேதா பகிர்ந்துள்ளார்.

    மந்திரங்கள் ஓதப்பட்டதால்

    மந்திரங்கள் ஓதப்பட்டதால்

    இதுதொடர்பாக டிவிட்டியுள்ள அவர் "இது நிச்சயமாக ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. மந்திரங்கள் ஓதப்பட்டதால்... நீதிக்கான படிகள் முன்னெடுக்கப்பட்டன! ஐ லவ் யூ கடவுளே... எங்களுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உண்மையை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் ஒரு படி நெருக்கமாக இருக்கிறோம்.. என பதிவிட்டுள்ளார்.

    வைரல் டிவிட்ஸ்

    வைரல் டிவிட்ஸ்

    அவரது இந்த டிவிட்டர் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெக்கப்பட்டார். அவரது மரணத்தில் தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sushant singh sister Shweta singh kirti says its not co incident. Sushant case probe handed over to CBI yesterday. She said its because of As the mantras were chanted...Steps towards Justice were taken!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X