சுஷாந்த் சிங் தற்கொலை.. சஞ்சய் லீலா பன்சாலியை விசாரிக்கும் போலீஸ்.. கங்கனாவை விசாரிக்கவும் திட்டம்?

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை விசாரிக்க சம்மன் அனுப்பியுள்ளது மும்பை போலீஸ்.

கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணத்தில், பாலிவுட் மாஃபியா ஈடுபட்டு இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

யஷ் ராஜ் ஜோப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மா மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முன்

தற்கொலைக்கு முன்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது பெயரை கூகுளில் போட்டு தேடியுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தகவல் அளித்துள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. நெப்போடிசம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் இந்த கொடிய முடிவை சுஷாந்த் எடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் முழுமையாக நம்புகின்றனர்.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

ரசிகர்கள் மற்றும் பல பாலிவுட் பிரபலங்களின் தொடர் அழுத்தத்தால், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் காஸ்டிங் இயக்குநர் ஷானு ஷர்மாவிடம் முதல் கட்ட விசாரணையை நடத்திய மும்பை போலீசார், இரண்டாம் கட்ட விசாரணைக்காகவும் அவருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

பத்மாவத் இயக்குநர்

பத்மாவத் இயக்குநர்

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை விவகாரத்தில் முதன்முறையாக விசாரிக்கப்பட உள்ளார். ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற பல பிரம்மாண்ட பாலிவுட் படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார்

கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ராம் லீலா படத்தில் முதலில் நடிக்க இருந்தது சுஷாந்த் சிங் ராஜ்புத் தான். ஆனால், கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு, ரன்வீர் சிங் அந்த படத்தில் நாயகனாக நடித்தார். அதே போல், பாஜிராவ் மஸ்தானி படத்திலும் சுஷாந்த் சிங்கிடம் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், அந்த படத்திலும் ரன்வீரை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் மாஃபியா

பாலிவுட் மாஃபியா

எம்.எஸ். தோனி படத்தில் நடித்து 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டிக் கொடுத்து பாலிவுட்டின் அடுத்த முன்னணி ஹீரோவாக சுஷாந்த் சிங் வருவதை பிடிக்காமல், பல பெரிய படங்களில் இருந்து திட்டமிட்டே அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகிறது. இதன் காரணமாகவே அவர் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என்றும், தற்கொலைக்கு தூண்டப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

மேலும், இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாகவும், பாலிவுட்டில் நடக்கும் நெப்போடிச பிரச்சனை குறித்தும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ள நடிகை கங்கனா ரனாவத் மற்றும் இயக்குநர் ஷேகர் கபூர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டு வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video

Sushant Singh மரணத்திற்கு இது தான் காரணம் | Kangana Ranaut with Evidence
வேதனையோடு

வேதனையோடு

முகேஷ் சப்ரா இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சைஃப் அலி கான், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் தில் பெச்சாரா வரும் ஜூலை 24ம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள அந்த படத்தை வேதனையோடு காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X