நான் அவருடன் இல்லாத அந்த 6 நாட்களில்தான் ஏதோ நடந்துள்ளது.. சுஷாந்தின் அக்காவை கோர்த்துவிடும் ரியா!
மும்பை: தான் சுஷாந்துடன் இல்லாமல் போன நாட்களில்தான் ஏதோ நடந்திருக்கிறது, அதற்கு அவரது சகோதரியான மீத்து சிங்தான் பதில் அளிக்க வேண்டும் என ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப சுஷாந்தின் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவருக்கே தெரியாமல்
சுஷாந்தின் மரணத்திற்கு ரியா சக்ரவர்த்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டுதான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே ரியா, சுஷாந்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கே தெரியாமல் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை அவருக்கு கொடுத்தது அண்மையில் அம்பலமானது.

ரியாவை கைது செய்யவேண்டும்
இதனை தொடர்ந்து சுஷாந்தை ரியா தான் விஷம் கொடுத்து கொன்று விட்டார் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகிறார். ரியா சக்ரவர்த்திதான் கொலையாளி என்று கூறி வரும் அவர்கள் ரியாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அறிய விரும்புகிறேன்
இந்நிலையில் இந்தியா டுடே ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ரியா, சுஷாந்தின் மரணம் குறித்து பேசியுள்ளார். அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார். மேலும் ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் தான் இல்லை என்றும் தான் இல்லாதபோது என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன் என்று நடிகை கூறினார்.

அவர்தான் பதில் சொல்ல வேண்டும்
மேலும் ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 13 வரை சுஷாந்துடன் இருந்த அவரது மூத்த சகோதரி மீத்து சிங்குதான் அதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அது ஒரு நாடகமா என்பதை நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

வீட்டிற்கு கூட போகவில்லை
ஜூன் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சுஷாந்துடன் எனக்கு எந்த தொடர்புமே இல்லை. நான் அவரின் வீட்டிலும் இல்லை. அவருடைய அக்கா மீத்துதான் அவருடன் இருந்தார். இது ஒரு தற்கொலை அல்லது வேறு ஏதாவது என்றால், ஜூன் 8 முதல் 14 வரை என்ன நடந்தது என்று நான் அவரிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தெளிவாக தெரியவில்லை
பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தான் சிபிஐ விசாரணை கேட்டதற்கு அதுவே காரணம் என்றும் நடிகை ரியா சக்ரவர்த்தி கூறியுள்ளார். "நான் சிபிஐ விசாரணையை விரும்பினேன், ஏனென்றால் சுஷாந்த் இறந்த அந்த கடைசி வாரம் பற்றி எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஜூன் 8 மற்றும் 14 க்கு இடையில் சரியாக என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை.

குழம்பி போயுள்ளேன்
சுஷாந்திற்கு மரணத்திற்கு நீதி வேண்டும் என்று நானும் விரும்பினேன், ஆனால் நான் ரொம்பவே குழம்பி போயுள்ளேன். அவர்கள் அதை கேலியாக்கிவிட்டார்கள். அதனால்தான் நான் சிபிஐ விசாரணையை விரும்பினேன், "என்று ரியா சக்ரவர்த்தி கூறினார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான உண்மை வெளி வரவேண்டும் என்றால் சிபிஐ போன்ற ஒரு 'உச்ச நிறுவனம்' இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











