ரியா டி ஷர்ட்டில் இருந்த ஸ்லோகத்தை வைத்தே அவருக்கு பதிலடி கொடுத்த சுஷாந்த் சகோதரி.. வேற லெவல்!
மும்பை: ரியா சக்கரவர்த்தியின் டி ஷர்ட்டில் இடம்பெற்ற ஸ்லோகத்தை வைத்தே அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுஷாந்தின் சகோதரி.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து மூன்று மாதம் ஆகவுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஸ்லோகம்
இந்த விவகாரம் பாலிவுட் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரியா சக்ரவர்த்தி கைதான போது அணிந்திருந்த டிஷர்ட் பலரின் கவனத்தையும் பெற்றது. குறிப்பாக அதில் இடம் பெற்றிருந்த ஸ்லோகம் பெரிதும் உற்று நோக்கப்பட்டது.

ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்
அதாவது, அவர் அணிந்திருந்த டி ஷர்ட்டில் "ரோஜாக்கள் சிவப்பு, வயலட் நீலம், ஆணாதிக்கத்தை நொறுக்குவோம், நானும் நீங்களும்." என குறிப்பிடப்பட்டிருந்தது. ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்ட பின்னர், பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் இந்த ஸ்லோகத்தை பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்லோகம் மூலம் பதில்
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, இந்த ஸ்லோகத்தையே சற்று மாற்றி டிவிஸ்ட் கொடுத்துள்ளார். அதாவது ஸ்வேதா சிங் கீர்த்தி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புதிய போட்டோவை ஒரு ஸ்லோகத்துடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சபாஷ்.. வேற லெவல்..
இது ரியாவின் டி-ஷர்ட் ஸ்லோகத்திற்கு பதிலாக, "ரோஜாக்கள் சிவப்பு, வயலட் நீலம். சரியானதுக்காக போராடுவோம், நானும் நீங்களும்" என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த சுஷாந்த் ரசிகர்கள் சபாஷ்.. வேற லெவல் என பாராட்டியுள்ளனர்.

எளிதாக கண்டுபிடிக்கலாம்
முன்னதாக நம் சாம்பல் செல்களைப் பயன்படுத்தி ஏன் திடீரென்று பல ஆதரவாளர்கள் பொங்குகிறார்கள் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நாங்கள் முட்டாள்கள் அல்ல, முழு உண்மையும் வெளியே வர காத்திருக்கிறோம். பின்னர் இந்த ஆதரவாளர்களைப் பார்ப்போம்! என டிவிட்டியிருந்தார்.
Recommended Video

ரியா புகார்
ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்ட உடனேயே கடவுள் எங்களோடு இருக்கிறார் என டிவிட்டினார். முன்னதாக ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் சகோதரிகள் பிரியங்கா சிங், மீத்து சிங் ஆகியோர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுஷாந்துக்கு மனோவியல் மருந்துகளை வழங்கியதாக மும்பை போலீஸில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











