twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் கொல்லப்பட்டாரா?.. திடீரென ட்ரென்டாகும் ஹேஷ்டேக்.. பரபரப்பில் பாலிவுட்! #SushantWasKilled

    |

    மும்பை: சுஷாந்த் கொல்லப்பட்டார் என ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்கால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியலே அவரது மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

    அவ தற்கொலை செஞ்சிருக்க மாட்டா.. சுஷாந்த் சிங் மேனேஜர் திஷா மரணத்தில் பெற்றோர்கள் திடீர் சந்தேகம்அவ தற்கொலை செஞ்சிருக்க மாட்டா.. சுஷாந்த் சிங் மேனேஜர் திஷா மரணத்தில் பெற்றோர்கள் திடீர் சந்தேகம்

    தகவல்கள் பதிவு

    தகவல்கள் பதிவு

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை போலீஸ் சுஷாந்த்தின் குடும்பத்தினர், நண்பர்கள், காதலி, திரை பிரபலங்கள் என 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்கள் போலீசாரால் ரெக்கார்டு செய்யப்பட்டன.

    ஐபிஎஸ் அதிகாரி

    ஐபிஎஸ் அதிகாரி

    இந்நிலையில் சுஷாந்தின் தந்தை ரியா சக்ரபர்த்தி மீது பீகார் போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ரியா சக்ரபர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து விசாரணைக்காக மும்பை சென்ற பீகார் ஐபிஎஸ் அதிகாரி 15 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டார்.

    ஏதோ தவறாக உள்ளது

    ஏதோ தவறாக உள்ளது

    இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மும்பை போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பீகார் டிஜிபி கடும் கண்டனம் தெரிவித்தார். ஏதோ தவறாக இருப்பதால்தான் மும்பை போலீஸ் விசாரணையை முடக்குகிறது என்றார். இதனை தொடர்ந்து சுஷாந்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை செய்தது.

    குற்றச்சாட்டுகள்

    குற்றச்சாட்டுகள்

    பீகார் அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்தது. சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவரான ஆதித்ய தாக்ரேவும் ரியா சக்ரவர்த்தியும் நண்பர்கள் என்பதாலேயே இந்த வழக்கு விசாரணையை மகாராஷ்டிர அரசு முடக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஏதோ மர்மம்

    ஏதோ மர்மம்

    இந்நிலையில் #SushantWasKilled என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது. சுஷாந்த் மரணம் குறித்தும் அவரது வழக்கு குறித்தும் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் வாய் திறக்கவில்லை, ரியா சக்ரபர்த்தியும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கில் ஏதோ மர்மம் உள்ளது என்ற ரீதியில் ரசிகர்கள் குற்றம்சட்டி வருகின்றனர்.

    முன்னுக்கு பின்

    முன்னுக்கு பின்

    உண்மை விரைவில் வெளி வரும் என்றும் இந்த ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் சுஷாந்தின் நண்பரான சந்தீப் சிங்கின் பேட்டிகளும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் நிச்சயம் இந்த மர்மத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    #SushantWasKilled hashtag is trending. Fans says truth will be revealed soon. Sushant death case handed over to CBI.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X