அப்போவே செம சரக்குலதான் இருப்பார்.. சுஷாந்த் சிங் குறித்து காதலி ரியா பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை: நான் சந்திக்கும் முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைக்கு அடிமையாகி இருந்தார் என நடிகை ரியா சக்கரவர்த்தி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியாயின.

பகீர் தகவல்கள்
இதனால் சுஷாந்த் மரண வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தலையிட விவகாரம் வேறுமாதிரி சென்றது. முன்னணி நடிகர் நடிகைகள் பலரின் பெயர்களும் இதில் அடிபட்டது. இதுதொடர்பாக முன்னணி நடிகர் நடிகைகள் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு வாக்குமூலம்
இந்த விவகாரத்தில் ரியா சக்கரவர்த்தி மீது கடந்த மார்ச் மாதம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள ரியா சக்கரவர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

அவர்களுக்கும் தெரியும்
அதன்படி தான் சந்திக்கும் முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகி இருந்ததாக கூறியுள்ளார். சுஷாந்த் கஞ்சா எடுத்துக்கொண்டது அவரது சகோதரி மற்றும் மைத்துனருக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பரபரப்பு வாக்குமூலம்
அவர்கள் இருவரும் சுஷாந்துடன் சேர்ந்து போதை பொருட்கள் உட்கொண்டதாகவும் ரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சாரா அலிகான், சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா அடிப்பதற்காக டூபிஸ்களை வழங்கினார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரியா சக்கரவர்த்தி.


Click it and Unblock the Notifications











