சுஷாந்த் என்னை சந்திக்க விரும்பினார்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை: ஏஆர் ரஹ்மான் உருக்கம்!
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னை சந்திக்க விரும்பினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் பேய்விட்டது என இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுது. சுஷாந்த் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பெச்சாரா படம் இன்று இரவு ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இரவு 7.30 மணிக்கு படம் ரிலீஸ் ஆகவுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான இப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் உருக்கம்
இந்தப் படத்தின் ட்ரெயிலரே ஒரு கோடிக்கும் மேற்பட்ட வியூஸ்களை அள்ளியது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான், அண்மையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சுஷாந்த் சிங் குறித்து உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

சந்திக்க விரும்பினார்
அதாவது மறைந்த சுஷாந்த் சிங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னை சந்திக்க விரும்பியதை ஏஆர் ரஹ்மான் இப்போது வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக லாக்டவுன் காரணமாக அது நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆச்சரியமாகவும் அழகாகவும்
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஏஆர் ரஹ்மான், 'தில் பெச்சாரா' பாடலின் காட்சிளால் தான் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். சுஷாந்த் மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
Recommended Video

உண்மை இருக்கிறது
இது அனைவருக்கும் சவாலான நேரம் என்று கூறியுள்ள ஏஆர் ரஹ்மான், ஒரு பிரபலமானவர்களை மக்கள் துன்புறுத்துகிறார்கள், மில்லியன் கணக்கானவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஒருவர் ஒன்றை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டால் அவர்கள் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் இருந்தால் அது அவர்களைப் பாதிக்கும். நாம் பார்ப்தை நம்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் உண்மை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











