வாவ்.. கம்பேக் கொடுத்த சுஷ்மிதா சென்.. குடும்பத்துக்காக.. எந்த எல்லைக்கும் செல்வாள் இந்த ஆர்யா!

மும்பை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ள 'ஆர்யா' எனும் வெப்சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் தமிழில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தில் நடித்திருந்தார்.

ஷாருக்கான், சல்மான் கான் என பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து, சில ஆண்டுகள் நடிப்புக்கு ஓய்வு விட்டு இருந்த நிலையில், தற்போது வெப்சீரிஸ் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆர்யா

ஆர்யா

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூன் 19ம் தேதி ரிலீசாகவுள்ள ‘Arya' வெப்சீரிஸ் மூலம் மீண்டும் கம்பேக் ஆகிறார் நடிகை சுஷ்மிதா சென். அதிலும் கெத்தான உமன் சென்ட்ரிக் கதையில், ஆக்‌ஷன், பாசம், சோகம் என கலந்து கட்டி, தனது குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார்.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

முதல்வன் படத்தில் ஷக்கலக்கா பேபி என்ற அறிமுக பாடலுக்கு நடனமாடிய மிஸ் யூனிவர்ஸ் அழகி சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 44 வயதாகிறது. இந்த வயதிலும், தனது நடிப்புத் திறமை கொஞ்சம் கூட மாறவில்லை என்பதற்கு தற்போது வெளியாகியிருக்கும் ஆர்யா டிரைலரே சாட்சி. காட்சிக்கு காட்சி ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிகை சுஷ்மிதா சென் மிரட்டுகிறார்.

என்ன கதை

என்ன கதை

சந்திராச்சூர் சிங்குக்கு மனைவியாக ஆர்யா கதாபாத்திரத்தில் இந்த வெப்சீரிஸில் நடிகை சுஷ்மிதா சென் நடித்துள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் செய்யும் முறைகேடான தொழில் குறித்து அறிந்ததும் அவரிடம் இருந்து விலக நினைத்து விவாகரத்து கேட்கிறார். ஆனால், திடீரென அவரது கணவன் எதிரிகளால் சுடப்பட்டு, குடும்பத்துக்கு மிகப்பெரிய பிரச்சனை வர, தனது கையில் துப்பாக்கியை ஏந்தி போராடும் பெண்ணாக மாறுகிறார் சுஷ்மிதா சென் என டிரைலரிலேயே தெளிவாக கதையை கூறியுள்ளார் இயக்குநர் ராம் மத்வானி.

நீர்ஜா இயக்குநர்

நீர்ஜா இயக்குநர்

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் மத்வானி இயக்கத்தில் சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான Neerja படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கண்டது. தற்போது மீண்டும் உமன் சென்ட்ரிக் கதையை மையப்படுத்தி ராம் மத்வானி இயக்கியுள்ள வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X