சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்த சுஷ்மிதா சென்னின் எக்ஸ் லவ்வர்.. அமரன் படத்தில் அந்த ரோலா?
சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 250 கோடி வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் முதல் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 வரை பல படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை இந்த படம் முறியடித்து முன்னேறி வருகிறது.
வேட்டையன் படத்தின் வசூலை விரைவில் முறியடிக்குமா? 300 கோடி வசூலை அமரன் கடக்குமா? என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்துள்ளன. இந்நிலையில், அமரன் படத்தில் பிரபல நடிகை சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் நடித்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படத்தில் சில பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ள நிலையில், அதில், ஒருவராக சுஷ்மிதா சென்னின் எக்ஸ் லவ்வரும் நடித்திருக்கிறார் என்பது தற்போது கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது.
திரைகளை ஆளும் அமரன்: இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சரியான தேர்வா இருக்குமா? என பல பிரபலங்களே நினைத்த நிலையில், தன்னுடைய திறமையையும் உழைப்பையும் ஒட்டுமொத்தமாக காட்டி பாக்ஸ் ஆபிஸ் மான்ஸ்டராகவே அதிரடி காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். பல முன்னணி நடிகர்கள் 200 கோடி வசூலை அள்ள பல ஆண்டுகளாக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வரும் நிலையில், நெற்றிப் பொட்டிலேயே சுட்டு அமரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் சாதனை படைத்துள்ளார். 3வது வாரத்திலும் அமரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவது கங்குவா படத்துக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

பாலிவுட் நடிகர்கள்: விஸ்வரூபம் படத்தில் மெயின் வில்லனாக நடித்த ராகுல் போஸ் பல பாலிவுட் படங்களில் வில்லனாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அமரன் படத்தில் மேஜர் முகுந்தின் உயர் அதிகாரியாக அவர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரை தொடர்ந்து மேஜர் முகுந்தின் நண்பனாக சிப்பாய் விக்ரமாக பாலிவுட் நடிகர் புவன் அரோரா நடித்துள்ளார். இவர் ஃபர்ஸி வெப்சீரிஸில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர இன்னொரு பாலிவுட் நடிகரும் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார்.
சுஷ்மிதா சென் எக்ஸ் லவ்வர்: ஷக்கலக்கா பேபியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதல்வன் படத்திலேயே அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் கடந்த சில ஆண்டுகளாக இளம் மாடல் நடிகருடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமீபத்தில், தான் சிங்கிள் ஆகிவிட்டேன் என பிரேக்கப் ஆனதை அறிவித்திருந்தார். அவரது முன்னாள் காதலரான ரோஹ்மன் ஷால் தான் அமரன் படத்தில் மெயின் வில்லனாக பாகிஸ்தான் பயங்கரவாதியாக ஆசிஃப் வானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எந்த ஸ்பெஷலும் இல்லை: சுஷ்மிதா சென் தனது பிரேக்கப்பை அறிவித்த நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக கருத்து ஏதும் சொல்லாமல் இருந்து வந்த ரோஹ்மன் ஷால் சமீபத்தில் அதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எந்த ஸ்பெஷலும் இல்லை எனக் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரை இவர் பூர்வீகமாக கொண்டிருந்த நிலையில், அமரன் படத்தில் இவருக்கு இப்படியொரு கதாபாத்திரத்தை ராஜ்குமார் பெரியசாமி கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











