திருமணமும் இல்லை..மோதிரமும் இல்லை..அன்பு மட்டுமே..லலித் மோடியுடனான காதல் குறித்து சுஷ்மிதா பதில்!
சென்னை : லலித் மோடி, சுஷ்மிதா சென் காதல் விவகாரம் காட்டுத்தீயாய் பரவிவரும் நிலையில், இருவருக்கு இடையேயான உறவுகுறித்து சுஷ்மிதா சென் பதிலளித்துள்ளார்.
Recommended Video
உலகளவில் மிகவும் பிரலமாகவும், பண மழை பொழியும் ஐபிஎல் லீக்கின் முதல் சேர்மனாக இருந்தவர் லலித் மோடி. இவர் மோசடி புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.
இந்நிலையில் லலித்மோடி இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக அறிவித்து, சுஷ்மிதாசென்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு நேற்று சோஷியல் மீடியாவை திணறவைத்தார்.

லலித்மோடி
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ரூ.470 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக பிசிசிஐ புகார் அளித்தது. அதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது லலித் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார். லலித் மோடி மீது கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல் முறைகேடு, இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தது, பண முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் இவர் மீது உள்ளன.

டேட்டிங்கில் இருக்கிறோம்
லலித் மோடி நேற்று நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும், சுஷ்மிதா சென் சிறந்த பார்ட்னர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் "டேட்டிங் மட்டும் செய்கிறோம். அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் நேற்று முதல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பல விதமான வதந்தி
மேலும், லலித் மோடி வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் சுஷ்மிதா மிகப்பெரிய மோதிரம் அணிந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள், லலித்மோடி அளித்த அன்பு பரிசு என்றும், இன்னும் சிலர் லலித் மோடி மற்றும் சுஷ்மிதாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன.

திருமணமும் இல்லை,மோதிரமும் இல்லை
இந்நிலையில், நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு மகள்களான ரெனி மற்றும் அலிசாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் ஒரு மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்.. திருமணமும் இல்லை.. மோதிரமும் இல்லை.. நிபந்தனையின்றி அன்பு மட்டுமே.. போதுமான தெளிவு கொடுக்கப்பட்டுள்ளது...இப்போது மீண்டும் வாழ்க்கை மற்றும் வேலைக்கு, எப்பொழுதும் என் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. I love you guys என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











