Don't Miss!
- News
"அந்த 3 வார்த்தை".. கவனிச்சீங்களா, மோடியை வைத்துக் கொண்டே கெத்து காட்டிய முதல்வர்.. டென்ஷனில் பாஜக
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Automobiles
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலரை பிரியலையாமே.. ஒன்றாக போஸ் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுஷ்மிதா சென்!
மும்பை: தனது காதலரை பிரிந்துவிட்டதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நடிகை சுஷ்மிதா சென்.
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், ரினி, அலிஷா என்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆன, சுஷ்மிதா இப்போதும் படங்களில் நடித்து வருகிறார்.

காதலித்து வருகிறார்
தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக, ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். பிறகு ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். 45 வயதான அவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், தன்னை விட 15 வயது குறைவான ரோமான் ஷால் என்பவரை காதலித்து வருகிறார்.

நினைக்கவே இல்லை
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், காதலித்து வரும் இவர்கள், ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ரோமான் ஷால் பற்றி நடிகை சுஷ்மிதா அளித்த பேட்டி ஒன்றில், என்னை விட 15 வயது குறைவானவரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து காதலிப்பேன் என நினைக்கவே இல்லை.

சிறப்பான ரொமான்ஸ்
என் வாழ்வில் சிறப்பான ரொமான்ஸ் இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அது இப்படியொரு ரொமான்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை' என்று கூறியிருந்தார். அவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஆரியா என்ற வெப் தொடர் வரவேற்பை பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன், தனது காதலர் ரோமானின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தனது கையில் டாட்டூ குத்தி இருந்தார்.

ஆண்கள் மாறுவர்கள்
இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூடகாமான மெசேஜ் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவர்கள் பிரிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
அந்தப் பதிவில், ஆண்கள் மாறுவர்கள் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் மாறுவதில்லை. ஆண்கள் செய்யும் தவறு, பெண்கள் தங்களை விட்டுப் பிரியமாட்டார்கள் என்று நினைப்பது என்று கூறியிருந்தார்.

பிரிந்து விட்டார்கள்
இதையடுத்து நெட்டிசன்ஸ், ரோஷனும் சுஷ்மிதாவும் பிரிந்து விட்டார்கள் என்றும் தனது காதலரைப் பற்றிதான் சுஷ்மா இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறி வந்தனர். பலர் ஆறுதலும் கூறிவந்தனர். இந்நிலையில் இருவரும் நேற்றிரவு ஒன்றாக மும்பையில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நிம்மதி பெருமூச்சு
முதலில் மாஸ்க் அணிந்து வெளியே செல்லும் அவர்கள், புகைப்படம் எடுப்பதைக் கண்டதும் மாஸ்கை கழற்றிவிட்டு போஸ் கொடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்கள் பிரிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.