காதலர் மீது இந்த நடிகைக்கு தான் எவ்வளவு நம்பிக்கைன்னு பாருங்க
மும்பை: நடிகை சுஷ்மிதா சென் தனது காதலருடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது சிறியவரான ரொஹ்மான் ஷால் என்ற மாடலை காதலித்து வருகிறார். ரொஹ்மானுக்கு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்.
தற்போது ரொஹ்மானும், சுஷ்மிதாவும் சேர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கிறார்கள்.
வீடியோ
தான் ரொஹ்மானுடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் சுஷ்மிதா சென். இந்நிலையில் புதிய ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.

பொறாமை
சுஷ்மிதா, ரொஹ்மான் ஒர்க்அவுட் வீடியோவை பார்த்து பலரும் வியந்துள்ளனர். ரொஹ்மான் மீது சுஷ்மிதா வைத்திருக்கும் நம்பிக்கை தெரிகிறது என்றும், அவர்களை பார்த்தால் லைட்டா பொறாமையாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம்
சுஷ்மிதா சென் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. இந்த காதலாவது கை கூடி திருமணத்தில் முடிய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். தங்களின் விருப்பத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள் அவர்கள்.

ஃபேஷன்
ப்ரியங்கா சோப்ரா அமெரிக்காவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து திருமணம் செய்துள்ளார். தற்போது சுஷ்மிதா மகன் வயது நபரை காதலிக்கிறார் என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். இதை எல்லாம் ப்ரியங்காவும் சரி, சுஷ்மிதாவும் சரி கண்டுகொள்வது இல்லை.


Click it and Unblock the Notifications











