'காதல் நிரந்தரமானது..' பிரபல நடிகையின் பெயரை பச்சைக் குத்திக்கொண்ட இளம் வயது காதலர்!

By

மும்பை: நடிகை சுஷ்மிதா சென்னின் காதலர், தனது கையில் அவர் பெயரின் முதல் எழுத்தை பச்சைக் குத்தியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக, ரட்சகன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பிறகு ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். 45 வயதான அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

வயது குறைவானவர்

வயது குறைவானவர்

ரினி, அலிஷா என்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், 45 வயது சுஷ்மிதா சென், தன்னை விட 15 வயது குறைவான ரோமான் ஷால் என்பவரை காதலித்து வருகிறார். முதலில் இதுபற்றி ஏதும் சொல்லாமல் இருந்த சுஷ்மா, பிறகு தங்கள் காதலை ஒப்புக்கொண்டார்.

எனக்கு இல்லை

எனக்கு இல்லை

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், காதலித்து வரும் இவர்கள், ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ரோமான் ஷால் பற்றி நடிகை சுஷ்மிதா அளித்த பேட்டி ஒன்றில், ஓர் ஆண் நம் வாழ்க்கையில் இருந்தால் தான் முழுமை பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

சிறப்பான ரொமான்ஸ்

சிறப்பான ரொமான்ஸ்

என்னை விட 15 வயது குறைவானவரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து காதலிப்பேன் என நினைக்கவே இல்லை. என் வாழ்வில் சிறப்பான ரொமான்ஸ் இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அது இப்படியொரு ரொமான்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை' என்று கூறியிருந்தார்.

வெப் தொடர்

வெப் தொடர்

நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்துள்ளா ஆரியா என்ற வெப் தொடர் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சுஷ்மிதாவின் காதலர் ரோமான், அவர் பெயரில் உள்ள முதல் எழுத்தை தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார்.

நிரந்தர டாட்டூ

நிரந்தர டாட்டூ

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார், நடிகை சுஷ்மிதா சென். அதற்கு கேப்ஷனாக, இந்த டாட்டூ நிரந்தரமானது இல்லை. ஆனால் காதல் நிரந்தரமானது என்று கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு நெட்டிசன்ஸ் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X