28 வயது மாடலை திருமணம் செய்யும் 42 வயது பிரபல நடிகை.. 2 மகள்களுக்கும் ஓகே.. நவம்பரில் டும் டும் டும்
சென்னை: முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென், பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து முதன்முதலில் உலக அழகிப் பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென் (42). இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
திரைத்துறையை தவிர சமூகப் பணிகளிலும் சுஷ்மிதா சென் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

காதல் திருமணம்:
இந்நிலையில் அவர் பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை (28) திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோமனும் சுஷ்மிதாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். தாங்கள் டேட்டிங் செய்யும் புகைப்படங்களை, இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.

நவம்பரில் திருமணம்:
இந்நிலையில் தங்களுடைய உறவை அவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவருடைய மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாக தெரிகிறது.

திருமண வேலைகள்:
ரோமன் அவர்களுக்கு ஏற்கனவே நல்ல அறிமுகம் என்பதால், தங்களுடைய தாய் திருமணத்துக்கு மகள்கள் கண்டிசன் ஏதும் போடவில்லையாம். இதனால் சுஷ்மிதா மகிழ்ச்சியில் இருக்கிறார். திருமண வேலைகளை ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மோதிரம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவும், ரோமனும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் சுஷ்மிதா கையில் இருந்த மோதிரத்தை பார்த்து, இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என செய்தி பரவியது. இந்நிலையில் சுஷ்மிதா - ரோமன் திருமணம் இந்த ஆண்டு நவம்பரில் நடக்கும் என செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











