ஆத்தாடி என்ன உடம்பி.. 44 வயசுல இந்த நடிகை செய்த காரியத்த பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ!

Recommended Video

44 வயசுல இந்த நடிகை செய்த காரியத்த பாருங்க

மும்பை: நடிகை சுஷ்மிதா சென் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சுஷ்மிதா சென் 1994ஆம் ஆண்டு தனது 18 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார். அதனை தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சுஷ்மிதா சென்.

இந்தியில் தஸ்தக் படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு முதல் முறையாக அறிமுகமானார் சுஷ்மிதா சென். அதனை தொடர்ந்து தமிழ்த்திரையுலகில் கால் பதித்த சுஷ்மிதா சென், நாகார்ஜுனுடன் ரட்சகன் படத்தில் நடித்தார்.

 மீண்டும் தமிழில்

மீண்டும் தமிழில்

தொடர்ந்து இந்திப்படங்களில் பிஸியான சுஷ்மிதா சென் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் மீண்டும் தமிழில் தலைக்காட்டினார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சுஷ்மிதா சென், ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறார்.

இரண்டு பெண் குழந்தைகள்

இரண்டு பெண் குழந்தைகள்

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சுஷ்மிதா சென், 2000ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். ரெனீ, அலிசா என்ற 2 பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

கருத்துவேறுபாடு

கருத்துவேறுபாடு

அவ்வபோது சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்படும் இவர், நட்சத்திர ஓட்டல் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

ரொமான்ஸ் மட்டும்தான்

ரொமான்ஸ் மட்டும்தான்

சுஷ்மிதா தற்போது உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்ற மாடலை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் என கூறப்பட்ட நிலையில் இப்போதைக்கு கல்யாணம் இல்லை வெறும் ரொமான்ஸ் மட்டும்தான் என்று விளக்கமளித்தார் சுஷ்மிதா சென்.

தலைக்கீழாக தொங்கி

தலைக்கீழாக தொங்கி

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் சுஷ்மிதா சென், இதனை முன்னிட்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அவர். அதில் ஒரே ஜம்பில் பல்டியடித்து தலைக்கீழாக தொங்கியப்படி நீண்ட நேரம் உடற் பயிற்சி செய்கிறார். அவர் தலைகீழாக தொங்கும் நேரத்தை அவரது பயிற்சியாளர் அருகில் நின்றபடியே கணக்கெடுக்கிறார்.

இந்த வயதிலும்

தலைக்கீழாக தொங்கிய சுஷ்மிதா பின்னர், அப்படியே முறையாக கால்களை கீழே இறக்கி சாதித்துவிட்டதாக சமிக்கை செய்கிறார். சுஷ்மிதா சென்னின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் 44 வயதில் எப்பளவு அசால்ட்டாக செய்கிறீர்கள்.. வாவ்.. என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X