»   »  42 வயதில் இப்படியா..? சுஷ்மிதா சென் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!

42 வயதில் இப்படியா..? சுஷ்மிதா சென் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சுஷ்மிதா சென் வொர்க்-அவுட் வீடியோ

மும்பை : பிரபஞ்ச அழகி பட்டம் வென்றபிறகு நடிகையாக இந்திய சினிமாவில் கலக்கியவர் சுஷ்மிதா சென்.

தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறார்.

அடிக்கடி அவரை பேஷன் ஷோக்களிலும் பார்க்க முடியும். இந்நிலையில் சுஷ்மிதா சென் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் சுஷ்மிதா சென். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு வெளிவந்த 'நோ பிராப்ளம்' என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சினிமா பக்கம் வரவேயில்லை.

ஃபேஷன் ஷோ

ஃபேஷன் ஷோ

இந்நிலையில் மும்பையில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுஷ்மிதாவிடம், நீங்கள் எப்போது மீண்டும் சினிமாவிற்கு வருவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், "நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேவை ஏற்படும் போது நிச்சயம் நடிப்பேன்." என்று கூறினார்.

மீண்டும் நடிப்பேன்

மீண்டும் நடிப்பேன்

"அப்படி நான் நடிக்கும் படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். அது ஐந்து பேராக இருக்கலாம் அல்லது ஐந்தாயிரம் பேராக கூட இருக்கலாம், அதுபற்றி கவலையில்லை. ரசிகர்களுக்காக படம் பண்ண வேண்டும். அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நான் மீண்டும் படங்களில் நடிப்பேன்" என்றார்.

வொர்க்-அவுட் வீடியோ

இந்நிலையில், நேற்று ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஜிம்னாஸ்டிக் ரிங்கில் நன்றாக வளைந்து தலைகீழாக உடற்பயிற்சி செய்வதை காட்டியுள்ளார்.

42 வயதில்

42 வயதில்

வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அது ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. 42 வயதில் செம ஃபிட்டாக இருக்கும் சுஷ்மிதா சென் மற்றவர்களையும் மோட்டிவேட் செய்யும் விதமாக வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

English summary
Sushmita Sen, who acted in Indian cinema after becoming a Miss Universe. Sushmita Sen, now 42, is doing many things to be always Fit. Sushmita Sen has released a work-out video on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil