Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ஆண்கள் செய்யும் தவறு..' பிரபல நடிகை புதிர் போஸ்ட்.. காதலரை பிரிகிறாரா..? ரசிகர்கள் டவுட்!
மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பூடகமான பதிவு ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக, ரட்சகன் படத்தில் நடித்திருந்தார்.
அப்பா இறந்து 3 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி ஒரு போட்டோவா.. பாலாஜியை விளாசும் நெட்டிசன்ஸ்!
பிறகு ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். 45 வயதான அவர், திருமணம் செய்து கொள்ளவில்லை.

15 வயது குறைவு
ரினி, அலிஷா என்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், சுஷ்மிதா சென், தன்னை விட 15 வயது குறைவான ரோமான் ஷால் என்பவரை காதலித்து வருகிறார். முதலில் இதுபற்றி ஏதும் சொல்லாமல் இருந்த சுஷ்மா, பிறகு தங்கள் காதலை ஒப்புக்கொண்டார்.

நினைக்கவே இல்லை
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், காதலித்து வரும் இவர்கள், ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ரோமான் ஷால் பற்றி நடிகை சுஷ்மிதா அளித்த பேட்டி ஒன்றில், என்னை விட 15 வயது குறைவானவரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து காதலிப்பேன் என நினைக்கவே இல்லை.

சிறப்பான ரொமான்ஸ்
என் வாழ்வில் சிறப்பான ரொமான்ஸ் இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அது
இப்படியொரு ரொமான்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை' என்று கூறியிருந்தார்.
நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர்
நடித்துள்ளா ஆரியா என்ற வெப் தொடர் வரவேற்பை பெற்றுள்ளது.

பூடகமான மெசேஜ்
பின்னர் சில மாதங்களுக்கு முன், தனது காதலர் ரோமானின் பெயரில் உள்ள முதல் எழுத்தை தனது கையில் டாட்டூ குத்தி இருந்தார். இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூடகாமாக மெசேஜ் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவர்கள் பிரிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ஆண்கள் தவறு
அந்தப் பதிவில், பிரச்னை என்னவென்றால், ஆண்கள் மாறுவர்கள் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் மாறுவதில்லை. ஆண்கள் செய்யும் தவறு, பெண்கள் தங்களை விட்டு பிரியமாட்டார்கள் என்று நினைப்பது. ஆனால், அவள் அதை செய்வாள் என்று பூடகமாக போஸ்ட் செய்துள்ளார். கதையின் நீதி என்று கேப்ஷன் வேறு கொடுத்திருக்கிறார்.

பிரிந்து விட்டார்கள்
இதையடுத்து நெட்டிசன்ஸ், ரோஷனும் சுஷ்மிதாவும் பிரிந்து விட்டார்கள் என்றும் தனது காதலரைப் பற்றிதான் சுஷ்மா இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். பலர் அவருக்கு ஆறுதலும் கூறிவருகின்றனர். இந்த போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.