twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி ரீமேக்கிற்கு பிறகு.. மெகா பட்ஜெட்டில் 3 மொழி படம் இயக்குகிறார் சுசி கணேசன்..யார் சார் ஹீரோ?

    By
    |

    சென்னை: மூன்று மொழிகளில் உருவாகும் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருப்பதாக இயக்குனர், சுசி கணேசன் தெரிவித்தார்.

    தமிழ், பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன்.

    திருட்டுப் பயலே 2 படத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களால் பேசப்பட்டது.

    நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்த நாள்.. குவிகிறது வாழ்த்து.. டிரெண்டாகும் #HappyBirthdayRashmikaநடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறந்த நாள்.. குவிகிறது வாழ்த்து.. டிரெண்டாகும் #HappyBirthdayRashmika

    ஷார்ட்கட் ரோமியோ

    ஷார்ட்கட் ரோமியோ

    இந்நிலையில், 'திருட்டுப் பயலே' படத்தை ஷார்ட்கட் ரோமியோ என்ற பெயரில் இந்தியில் தயாரித்து, ரீமேக் செய்திருந்தார் சுசி கணேசன். இதில் பிரபல இந்தி நடிகை அமிஷா படேல், நீல் நிதின் முகேஷ், பூஜா குப்தா, மெஹ்ரின் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் இந்தியில் வரவேற்பை பெற்றது.

    ஊர்வசி ராவ்தெலா

    ஊர்வசி ராவ்தெலா

    இதையடுத்து இப்போது, திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இதில் பாபி சிம்ஹா நடித்த கேரக்டரில் வினீத்குமார் சிங், அமலா பால் கேரக்டரில் ஊர்வசி ராவ்தெலா, பிரசன்னா நடித்த கேரக்டரில் அபிஷேக் ஓபராய் நடிக்கின்றனர். தமிழில் சுசி கணேசன் நடித்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். லக்னோ மற்றும் வாரணாசியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது.

    அச்சுறுத்தல்

    அச்சுறுத்தல்

    படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக் கிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை எட்டியுள்ளது. உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    சுசி கணேசன்

    சுசி கணேசன்

    இந்தியாவிலும் கொரோனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா, டிவி தொடர், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மும்பையில் இருக்கும் இயக்குனர் சுசி கணேசனிடம் பேசினோம்.

    ஸ்கிரிப்ட் வேலை

    ஸ்கிரிப்ட் வேலை

    'கொரோனாவால், அரசு அறிவுறுத்தலின்படி வீட்டுக்குள் இருக்கிறோம். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். திருட்டுப் பயலே 2 படத்தின் இந்தி ரீமேக் வேலை இன்னும் முழுவதுமாக முடியவில்லை. கொரோனா இல்லை என்றால் அதற்குள் வேலைகள் முடிந்திருக்கும். இப்போது, அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையில் இருக்கிறேன்.

    Recommended Video

    கொரோனா !! டைரக்டர் பாக்யராஜ் உருக்கம் | ONEINDIA TAMIL
    பெரிய பட்ஜெட்

    பெரிய பட்ஜெட்

    அது, தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும், பான் இந்தியா படமாக இருக்கும். பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ என படம் உருவாக இருக்கிறது. ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. அதற்கான தொடக்க வேலைகளுக்கு இந்த நேரத்தைப் பயன்படுத்தி கொள்கிறேன். பொதுமக்கள், அரசு சொல்வதை கேட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்றார்.

    English summary
    Director Susi ganesan plans for 'Pan India Movie', after completing Thiruttu payale 2 Hindi remake
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X