சுசி கணேசன் போன் செய்து அசிங்கமாக திட்டினார், அதை கேட்டு மனைவி சிரித்தார்: அமலா பால்

By Siva

Recommended Video

சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால்- வீடியோ

சென்னை: இயக்குனர் சுசி கணேசன் தனக்கு போன் செய்து திட்டியதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுசி கணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். அவருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் சுசி கணேசன் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலா கூறினார்.

திட்டு

திட்டு

அமலா லீனாவுக்கு ஆதரவு தெரிவித்ததை பார்த்த சுசி கணேசன் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளார். லீனா மணிமேகலை பொய் சொல்கிறார் என்று சுசி கணேசன் கூறி வந்த நிலையில் முன்னணி நடிகையான அமலா பால் பாலியல் புகார் தெரிவித்துள்ளதால் அனைவரின் கவனமும் இந்த விவகாரம் பக்கம் திரும்பியுள்ளது.

அமலா பால்

இயக்குனர் சுசி கணேசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சரி எனக்கு போன் செய்தார்கள். என் நிலையை விளக்கலாம் என்று நினைத்து போனை எடுத்தேன். அவரின் மனைவியை சமாதானம் செய்ய முயன்றபோது சுசி என்னை திட்டத் துவங்கினார். அவரின் மனைவியோ அதை கேட்டு சிரிக்கிறார். இருவரும் சேர்ந்து என்னை பற்றி கேவலமாக பேசினார்கள். இது போன்று செய்து என்னை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார் என அமலா பால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பாலை இயக்குனர் சுசி கணேசன் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால்

விஷால்

முன்பு ஒரு முறை தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட உடன் அமலா பால் புகார் தெரிவித்தார். நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்றார் விஷால். தற்போதும் சம்பவம் நடந்த உடனே அமலா அது குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுப்பாரா விஷால்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X