சுசி கணேசன், தொழிலதிபர், பவ்நிந்தர் சிங்.. இதுவரை அமலா பால் கொடுத்த பாலியல் தொல்லை புகார்கள்!

Amala Paul raised complaint against Director Susi Ganeshan, Chennai based Businessman now his Close Friend Bhavninder Singh shocks fans.

சென்னை: கோலிவுட்டின் படு போல்டான நடிகைகளில் ஒருவராக அசத்தி வருகிறார் அமலா பால்.

சமீபத்தில் அவர் தயாரித்து நடித்த கடாவர் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

அமலா பாலின் புகாரின் அடிப்படையில் அவரது நண்பர் பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்னதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் இயக்குநர் சுசி கணேசன் உள்ளிட்டோர் மீது அமலா பால் சொன்ன பாலியல் புகார்கள் குறித்து இங்கே பார்ப்போம்..

ஏ.எல். விஜய் உடன் விவாகரத்து

ஏ.எல். விஜய் உடன் விவாகரத்து

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த அமலா பால் இயக்குநர் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தொழிலதிபர் கொடுத்த தொல்லை

தொழிலதிபர் கொடுத்த தொல்லை

நடிகை அமலா பால் விவாகரத்து செய்து கொண்ட நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்தார் அமலா பால். கொட்டிவாக்கத்தை சேர்ந்த அவரை மாம்பழம் போலீசார் கைது செய்தது பரபரப்பை கிளப்பியது. மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாட அமலா பால் சென்ற இடத்தில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப்பட்டது.

திருட்டுப் பயலே இயக்குநர் மீது

திருட்டுப் பயலே இயக்குநர் மீது

திருட்டுப் பயலே 2 படத்தை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை பாலியல் புகார் கொடுத்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மீடூ ஹாஷ்டேக்கில் திருட்டுப் பயலே 2 படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கும் பாலியல் தொல்லைகளை கொடுத்தார் சுசி கணேசன் என பரபரப்பு குற்றச்சாட்டை அமலா பால் முன் வைத்திருந்தார்.

பவ்நிந்த் சிங்குடன் டேட்டிங் செய்தாரா?

பவ்நிந்த் சிங்குடன் டேட்டிங் செய்தாரா?

அதன் பின்னர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் உடன் நடிகை அமலா பால் டேட்டிங் செய்ததாகவும், இருவரும் நடத்திய திருமண போட்டோஷூட்டில் லிப் லாக் அடித்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. தனது அனுமதி இல்லாமல் அந்த போட்டோக்களை அவர் வெளியிட்டார் என புகார் அளித்திருந்தார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்நிலையில், நடிகை அமலா பாலின் காதலர் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த பவ்நிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகை அமலா பால் பரபரப்பு புகார் கொடுத்த நிலையில், பவ்நிந்தர் சிங்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X