லீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்
Recommended Video

சென்னை: லீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று கூறி இயக்குனர் சுசி கணேசன் மிரட்டியதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
திருட்டுப்பயலே படம் புகழ் இயக்குனர் சுசி கணேசன் மீது இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுசி கணேசன் லீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்ந்தாலும் அசரப் போவது இல்லை என்கிறார் லீனா.
சுசி கணேசன்
#metoo சுசி கணேசன் என் மேல் கிரிமினல் கேஸ் போட்டிருப்பதாக மீடியாவில் flash செய்கிறார். முதலில் கோர்ட்டில் நம்பர் ஆகட்டும். நோட்டீஸ் வரட்டும். Let me then quash it. இவனை மாதிரி பொய்யர்களோடல்லாமல் நேரடியாக அதிகாரத்தோடு போர் புரிவதும் தான் எனக்கும் பிடிக்கும் என்று லீனா ட்வீட்டியுள்ளார்.
சித்தார்த்
லீனாவின் ட்வீட்டை பார்த்த சித்தார்த் கூறியிருப்பதாவது, சுசி கணேசன் வயதான என் தந்தையிடம் போனில் பேசி தொடர்ந்து நான் தொடர்ந்து லீனாவை ஆதிரித்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். நான் லீனா மணிமேகலையை ஆதரிக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தைரியமாக இருந்து போராடுங்கள் சகோதரி என்று ட்வீட்டியுள்ளார். #MeToo #TimesUp
பாராட்டு
லீனா மணிமேகலை உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சித்தார்த்தை பலர் பாராட்டியுள்ளனர். மிரட்டல் விடுத்த சுசி கணேசன் மீது போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
மிமிக்ரி
போன் செய்தது நான் இல்லை யாரோ மிமிக்ரி செய்துள்ளார்கள் என்று சுசி கணேசன் சொல்வாரோ?


Click it and Unblock the Notifications











