50வது பிறந்தநாள் காணும் பிரபல இயக்குனர் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
சென்னை: இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனரான சுதா கொங்கரா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தெலுங்கு படத்தில் திரைக்கதை எழுத தொடங்கி பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கினார்.
சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாகவும், இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னனி இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் சுதா கொங்கரா.

தமிழில் அறிமுகம்
இந்திய சினிமாவில் பிரபல முன்னனி இயக்குனரான மணிரத்னத்திடம் 7 வருடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சுதா கொங்காரா. 2008ம் ஆண்டு Andhra Andagadu எனும் தெலுங்கு படத்தை முதலில் இயக்கினார். விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

குவிந்த விருதுகள்
பின்னர் 2016ம் ஆண்டில் மாதவன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கினார். பெண்களுக்கான குத்து சண்டையை மையமாக வைத்து தமிழ், ஹிந்தியில் வெளியான இந்த படம் பல விருதுகளை குவித்தது. பின்னர் 2020ம் ஆண்டு சூரியா, அபர்ணா ஆகியோரின் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தைஇயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இளமை இதோ இதோ, தங்கம்
2020ம் ஆண்டில் சூரரை போற்று மட்டுமன்றி புத்தம் புது காலை (இளமை இதோ இதோ), பாவ கதைகள் (தங்கம்) ஆகிய Anthology படங்களும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையில் பெரிய ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. சுதா கொங்கராவின் அடுத்த படத்தின் அப்டேட் குறித்தும் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னனி நாயகி
காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சோனியா அகர்வால் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த ஆண்டில் பகீரா உட்பட கைவசம் 4 படங்களை வைத்துள்ளார் சோனியா அகர்வால். முன்னனி நாயகியாக மீண்டும் வலம் வர தயாராகி கொண்டுள்ளார் சோனியா அகர்வால்.


Click it and Unblock the Notifications











