வெறித்தனமான வசூல் வேட்டையாடும் சுல்தான்... பூரிப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு!
சென்னை : நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளது.
சம்மர் ஹாலிடே தொடங்குவதை முன்னிட்டு சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த 2-ஆம் தேதி வெளியானது.
முதல்நாளே வசூல் வேட்டையை ஆரம்பித்த சுல்தான் வார இறுதிகளில் முதல் நாள் வசூலை மிஞ்சும் அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி வருவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பூரித்து கூறியுள்ளார்.

தரமான கமர்ஷியல்
காதல், காமெடி, விவசாயம், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த பக்கா கமர்சியல் திரைப்படமாக சுல்தான் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கும் தரமான கமர்ஷியல் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின்
இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்ததோடு தமிழிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்க வழக்கமான தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலம் தமிழ் ரசிகர்களை மேலும் வர்ணிக்க வைத்துள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி
திரையரங்குகள் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் மிதந்து கொண்டுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் வேட்டை நடத்தி பட்டையைக் கிளப்பி வரும் சுல்தான் படத்தின் வசூலை பற்றி முதல் முறையாக அதன் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கலெக்சனை அள்ளியது
அந்த ட்வீட் பதிவில் சுல்தான் திரைப்படம் வெறித்தனமாக வெற்றி பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் செய்ததை விடவும் சனி ஞாயிறுகளில் வேற லெவலில் கலெக்சனை அள்ளியது. பொதுமக்களின் வாய் முகூர்த்தம் அப்படியே வெற்றி பெற்றுள்ளது. மிக விரைவிலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை எட்ட உள்ளது. என பூரித்து பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











