»   »  அட, சரியான நேரத்தில் தான் 'சுட்டப் பழம் சுடாத பழம்' ரிலீஸாகியிருக்கு

அட, சரியான நேரத்தில் தான் 'சுட்டப் பழம் சுடாத பழம்' ரிலீஸாகியிருக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தப்படுகையில் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் சுட்டப் பழம் சுடாத பழம்.

ஒரு தாய் குழந்தையை பத்து மாதம் சுமந்து அதை பெற்றெடுப்பதற்குள் மறுபிறவி எடுக்கிறாள். இப்படி அரும்பாடுபட்டு பெற்றெடுக்கும் குழந்தைகள் நம் நாட்டில் மாயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Sutta Pazham sudatha pazham hit the screens at right time

நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகின்றனர். அதில் 11 ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்றே தெரியாமல் போகிறது. படிக்கவே பயங்கரமாக இருக்கிறதே பெற்றவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.

பெற்றவர்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சுட்டப் பழம் சுடாத பழம். சட்டசபை தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்ட இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

பேய் படங்களை தேடிப் பிடித்து பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தையும் பார்க்கலாமே.

Read more about: release, ரிலீஸ்
English summary
Sutta Pazham Sudatha Pazham hit the screens on friday. The movie is based on children being kidnapped which is a very major issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil