சர்வைவர் ஒரே ஒரு எபிசோடு தான் காமிச்சேன்.. மொத்த பிக் பாஸ் சீசனும் க்ளோஸ்.. வைரலாகும் மீம்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5க்கு மிகப்பெரிய டஃப் போட்டியாளராக சர்வைவர் ரியாலிட்டி ஷோ வந்து விட்டதாக சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஜீ தமிழில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வைவர் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ரியாலிட்டி ஷோவில் நடிகர் அர்ஜுன் ஹோஸ்ட்டாக செயல்பட ஏகப்பட்ட திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

டிரெண்டாகும் சர்வைவர்

டிரெண்டாகும் சர்வைவர்

பிக் பாஸ் நிகழ்ச்சியை போல லெமன் ஆன் தி ஸ்பூன் போல டாஸ்க்குகள் கொடுக்காமல் கடினமான டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு முதல் எபிசோடிலேயே கொடுத்து சர்வைவர் நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரியாலிட்டி ஷோ ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸுக்கு தலைவலி

பிக் பாஸுக்கு தலைவலி

தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பி கிங்காக இதுவரை இருந்து வந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு இந்த ஆண்டு சர்வைவர் கடும் போட்டியை கொடுக்கும் என நெட்டிசன்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பிக் பாஸ் போட்டியாளர்களை விட இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பிரபல நடிகர்கள் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் சர்வைவர் பக்கம் சென்றுள்ளது.

நட்சத்திர போட்டியாளர்கள்

நட்சத்திர போட்டியாளர்கள்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட நட்சத்திர போட்டியாளர்கள் உள்ளனர். காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு பிரிவுகளாக அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். நடிகர் விக்ராந்த், நந்தா, லட்சுமி பிரியா, ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, இந்திரஜா சங்கர், சரண், ராம் சி, விஜய லட்சுமி, உமாபதி ராமையா என பல பிரபலங்கள் உள்ளனர்.

பிக் பாஸ் மெட்டீரியல்

பிக் பாஸ் மெட்டீரியல்

பக்கா பிக் பாஸ் மெட்டீரியல சர்வைவருக்கு அனுப்பி வேஸ்ட் பண்ணிட்டீங்க என விஜே பார்வதியை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே இணையத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் உள்ளதால் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் அங்கே பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் க்ளோஸ்

பிக் பாஸ் க்ளோஸ்

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் சர்வைவர் நிகழ்ச்சியையும் கம்பேர் பண்ணி ஏகப்பட்ட மீம்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. "ஒரே ஒரு சர்வைவர் எபிசோடு தான் காமிச்சேன்.. மொத்த பிக் பாஸ் ஃபேன்ஸும் என் பக்கம் வந்துட்டாங்க" என்கிற தெறி மீம் டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் டீம் நிலைமை

பிக் பாஸ் டீம் நிலைமை

ஜி தமிழில் சர்வைவர் எனும் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக தொடங்கி உள்ள நிலையில், பிக் பாஸ் டீமின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், சர்வைவர் நிகழ்ச்சியை வாயை பிளந்து பார்த்து வருவதாகவும் மீம்களை போட்டு தெறிக்க விடுகின்றனர்.

கமல் காப்பாத்துவாரா

கமல் காப்பாத்துவாரா

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு இருக்கும் மிகப்பெரிய வலிமையே உலக நாயகன் கமல்ஹாசன் தான். அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு டஃப் ஆன டாஸ்க்குகள் மற்றும் கார சார சண்டைகளை ஸ்க்ரிப்டாக கொடுத்து ஷோவை பக்காவாக மாற்றினால் தான் தப்பிக்க முடியும் என பிக் பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X