சூர்யா -கௌதம் மேனனின் 4வது சிங்கிள் அதிருதா ரிலீஸ்.... கண்டிப்பாக ரசிகர்கள் இதயம் அதிரும்
சென்னை : நவரசா ஆந்தாலஜி வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.
இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கிடார் கம்பி மேலே நின்று.
இதன் நான்காவது பாடல் அதிருதா தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

6ம் தேதி ரிலீஸ்
மணிரத்னத்தின் முயற்சியில் திரையுலக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நவரசா ஆந்தாலஜி உருவாகியுள்ளது. 9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் 9 படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. வரும் 6ம் தேதி நெட்பிளிக்சில் நவரசா ரிலீசாக உள்ளது. தற்போது இதன் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாயகன் சூர்யா
நடிகர் சூர்யா மற்றும் கௌதம் மேனன் இணைந்துள்ள படம் கிடார் கம்பி மேலே நின்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரயாகா மார்ட்டின். சூர்யா -கௌதம் மேனன் காம்போ எப்போதுமே சிறப்பாக அமையும். அதேபோல இந்த படமும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது.

அதிருதா பாடல்
இதன் மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் இசையில் மதன் கார்க்கி வரிகளில் அந்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்நிலையில் தற்போது அதிருதா என்ற நான்காவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மெலடி நம்பர்களாக அமைந்துள்ளன.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல்
இந்த படத்தில் சூர்யாவை இளமையான தோற்றத்தில் காண முடிகிறது. ஒன்பது ரசங்களை மையமாக கொண்டு நவரசா உருவாகியுள்ள நிலையில் தனக்கு மிகவும் பரிட்சயமான காதலை கையில் எடுத்துள்ளார் கௌதம் மேனன். அடுத்தடுத்த இந்த படத்தின் பாடல்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











