இங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை மரண கலாய் கலாய்த்திருக்கிறார் நடிகரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்வி சேகர்.
விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிதான் தற்போது தமிழ் மீடியாக்களில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

எஸ்வி சேகர் கலாய்
பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலங்கள் பலரும் பார்த்த தங்களின் கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் எஸ்வி சேகர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை பார்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் மரண கலாய் கலாய்த்துள்ளார்.
இந்திப்படம் பார்த்த பீலிங்
அவர் கூறியிருப்பதாவது, இன்றைய பெரிய முதலாளி (BIG BOSS) ஆரம்பமே அதிர்ச்சி. தமிழ்ப்படம்னு போய் உக்காந்தா முதல் 5 நிமிஷம் இங்கிலீஷ் சப் டைட்டில்கூட இல்லாத இந்திப்படம் பார்த்த பீலிங். கேட்டா அது அரசியலாம் என பதிவிட்டு கமல்ஹாசனை நக்கலடித்துள்ளார்.

மேடையில் சல்யூட்
நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒரு முக்கிய விவகாரம் குறித்து பேசிவிட்டு பின்னர் நிகழ்ச்சிக்குள் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், இஸ்ரோவுக்கு புகழாரம் சூட்டி, பிக்பாஸ் மேடையில் சல்யூட் அடித்தார்.

தமிழ் மொழி
கடந்த வாரம் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து இறந்தது குறித்து பேசினார். நேற்றைய எபிசோடின் தொடக்கத்தில், இந்தி குறித்து அமித் ஷா பேசியதையும், கீழடி அகழ்வாராய்ச்சியில் வெளிப்படும் உண்மைகள் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் பேசினார் கமல்.

கமலின் அரசியல்
இதனை நக்கலடிக்கும் வகையில் எஸ்வி சேகர் அப்படி ஒரு டிவிட்டை போட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி கமல்ஹாசன் அரசியல் பேசி வருகிறார். கமலின் அரசியலை கிண்டலடிக்கும் வகையிலும் எஸ்வி சேகர் டிவிட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











