மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்? எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் இந்து ரசிகர்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக எஸ்வி சேகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஜய் நடித்திருக்கும் பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவில் தீவிரமாக உள்ளனர்.
அதே நேரத்தில் பிகில் படம் சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்து வருகிறது. இதனால் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகுமா என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர் விஜயின் ரசிகர்கள்.
மத மாற்றம்
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பிகில் டிரெஸ் என கடைகளில் கறுப்பு நிற உடையும் சிலுவை மாலையும் செட்டாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் விஜய் இந்து ரசிகர்களை மதம் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் கருத்து
இதே கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கேசவன் ராமன் என்பவர், இதுகுறித்து உங்கள் கருத்து என்ன ஜி என எஸ்வி சேகர், எச் ராஜா உள்ளிட்டோரிடம் கேட்டார்.
மாற்று மதத்தினரா?
அதற்கு பதிலளித்த எஸ்வி சேகர், இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா என கேட்டுள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை
மேலும் மற்றொரு டிவிட்டில் விஜய் விபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா. வேற்றுமையில் ஒற்றுமை.. இதை கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











