twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல வேளை இறைவன் அருளால் விஷால் ஆர்.கே. நகரில் இப்படி செய்யாமல் தடுக்கப்பட்டது: எஸ்.வி. சேகர்

    By Siva
    |

    Recommended Video

    நல்ல வேளை இறைவன் அருளால் விஷால் ஆர்.கே. நகரில் இப்படி செய்யாமல் தடுக்கப்பட்டது: எஸ்.வி. சேகர்

    சென்னை: 1500 பேர் உள்ள சங்க உறுப்பினர் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் 2 மணி தாமதமாக ஆரம்பித்த கூட்டத்தில் தலைவர் தேசீயகீதம் பாடி ஓடிய அவலம். நல்ல வேளை இறைவன் அருளால் ஆர் கே நகரில் நடக்காமல் தடுக்கப்பட்டது என நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் ட்வீட்டியுள்ளார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திடீர் என்று தேசிய கீதம் பாடி கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டார்.

    இதை பற்றி தான் பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆர்.கே. நகர்

    1500 பேர் உள்ள சங்க உறுப்பினர் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் 2 மணி தாமதமாக ஆரம்பித்த கூட்டத்தில் தலைவர் தேசீயகீதம் பாடி ஓடிய அவலம்😂👎 நல்ல வேளை இறைவன் அருளால் ஆர் கே நகரில் நடக்காமல் தடுக்கப்பட்டது என நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் ட்வீட்டியுள்ளார்.

    தனஞ்செயன்

    தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1500 பேர் என்று எஸ்.வி. சேகர் ட்வீட்டியதை பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கோவிந்த், 1211 உறுப்பினர்கள் தான் சார் என்று பதில் அளித்துள்ளார்.

    உறுப்பினர்கள்

    ஆனா இன்னிக்கு வந்தது சுமாராக 450 பேர்தான். நீங்க புள்ளி விவரப்புலி. இங்கயே இவ்வளவு டென்ஷன் ஆகறவரு 2.5 லட்சம் பேருக்கு மேல உள்ள ஜனங்க கேள்வி கேட்டா உடனடி பதில் கோவமா தேசீய கீதம் பாடுவாரா. 😜 என எஸ்.வி. சேகர் தனஞ்செயனிடம் கேட்டுள்ளார்.

    விஷால்

    சார் நடிகர் சங்க தேர்தல் அப்ப நீங்கதானேய் அவருக்கு சப்போர்ட் பண்ணுனிங்க இப்ப என்ன சார்??? என்று ஒருவர் கேட்க, கால் பண்ணுங்க விளக்குகிறேன் என்றார் எஸ்.வி. சேகர்.

    English summary
    Actor cum BJP functionary S.V. Shekher made fun of Vishal who ran away from TFPC general body meeting by singing national anthem. Even senior actress Radhika Sarathkumar slammed Vishal for the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X