Sve Shekar: என்னோட சாதனையை ரஜினியால் பண்ண முடியாது.. எஸ்.வி. சேகர் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.வி. சேகர் எம்ஜிஆர், சிவாஜியை போலத்தான் ரஜினியும் அவரது ரூட்டே தனி என்றும் நானும் அவரும் ஒரே வயசுக்காரங்க தான் என்றும் பேசிய பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சாதாரண நடிகர்கள் படங்களை பார்க்க எவனாவது 1000 ரூபாய் டிக்கெட் கொடுத்து வந்து பார்ப்பானா.. ஆனால், ரஜினிகாந்த் நடிச்ச படம் என்றால் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் வைத்தாலும் பார்க்க ரசிகர்கள் ரெடியா இருக்காங்க.. ஜெயிலர் படம் இப்போ ரிலீஸ் ஆச்சு, தியேட்டரில் எப்படி கூட்டம் கூடி பார்த்தாங்க, எவ்வளவு பெரிய வசூல் என பேசியுள்ளார்.

ஆனால், என்னுடைய சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது என்றும் எஸ்.வி. சேகர் போகிற போக்கில் செம கோல் போட்டுள்ளார்.
நிம்மதி இருக்காது: கோடிக் கணக்குல பணத்தை வைத்திருந்தா நிம்மதி இருக்காது. வேலைக்காரங்க மேல நம்பிக்கை வராது, கட்டுன பொண்டாட்டி மேலயே சந்தேகப்படத் தோணும். கடனில்லாமல் வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. நான் அப்படித்தான் வாழுறேன் என்றார் எஸ்.வி. சேகர்.
மூன்றெழுத்து மந்திரம்: எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு மூன்றெழுத்து மந்திரம் தமிழ் சினிமாவை ஆள்கிறது என சொன்னால் அது ரஜினி மட்டும் தான். அந்த அளவுக்கு அவர் இந்த வயதிலும் உழைக்கிறார். அவரை பார்க்கத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து செல்கின்றனர். உன் படம் 1000 ரூபாய் டிக்கெட் வச்சு வித்தா எவனாவது வந்து பார்ப்பானுங்களா என பக்காவாக பேசியுள்ளார்.
என் சாதனையை முறியடிக்க முடியாது: ரஜினிக்கும் எனக்கும் ஒரே வயது தான். ஆனால், அவர் இப்போ இருப்பது போல நீங்க ஏன் இல்லைன்னு கேட்க கூடாது. அவர் ரூட் தனி, என் ரூட் தனி. நாம எப்படி நல்லா இருக்குறோம்னு நினைத்து சந்தோஷப்படணுமே தவிர, மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை படக்கூடாது.

நான் உலகம் முழுவதும் 7000 டிராமா ஷோஸ் போட்டிருக்கேன். இந்த சாதனையை இப்போ இருக்குற யாராலும் நினைச்சாலும் செய்ய முடியாது. அது எனக்கு கிடைத்த பாக்கியம் என பேச அரங்கமே கலகலப்பாகி விட்டது.
எஸ்.வி. சேகர் அரசியல் வட்டத்தை விட்டு மீண்டும் சினிமாவில் இப்படி நகைச்சுவைகளை அள்ளித் தெளிக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











