Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்
Recommended Video
சென்னை: பாடகியாக இருந்து தனது இனிய குரலால் மயக்கிய பாடகி ஸ்வாகதா தற்போது இசையமைப்பாளராகியுள்ளார். அவரே நடித்து, இசையமைத்து பாடிய அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இன்றைக்கு இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறும்போது, பாடகி ஸ்வாகதா இசையமைப்பாளராகியுள்ளார்.
இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. அவரின் குரலில் காற்றின் மொழி படத்தில் டர்ட்டி பொண்டாட்டி, லட்சுமி படத்தில் ஆலா ஆலா பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.
தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார்.
வீடியோவில் அவரே கதாநாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசை அமைப்பாளராக வளர்ச்சி அடைந்துள்ளார். முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்த பாடலின் துவக்கத்தில், நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம் என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிஸம் செய்கிறது.
ஸ்வாகதா இசையமைத்து, நடித்த அடியாத்தே பாடலை கவுதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா.பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குநர் அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது !