twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்.. ஆளுநரை சந்தித்தது சுவாமி சங்கர்தாஸ் அணி!

    |

    சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சுவாமி சங்கர்தாஸ் அணியினர் சென்னையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர்.

    நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 61 உறுப்பினர்கள் திடீரென நீக்கப்பட்ட, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்தலை மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார்.

    Swamy Shankardass team meets Governor Banwarilal purohit today

    முன்னதாக பாண்டவர் அணியினர் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் நாசர், விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சுவாமி சங்கர்தாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.

    காலை 11 மணி அளவில் கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேச சுவாமி சங்கர்தாஸ் அணியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.

    அப்போது நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆளுநரிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளுநரிடம் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் புகார் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Swamy Shankardass team meets Governor Banwarilal purohit today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X