அப்பாவிடம் மகளின் சுயஇன்ப காட்சி பற்றி கேட்ட நபர்: விளாசிய நடிகை
மும்பை: தான் சுயஇன்பம் அனுபவித்த காட்சி குறித்து தனது தந்தையிடம் சந்தேகம் கேட்ட நபரை நடிகை ஸ்வரா பாஸ்கர் விளாசியுள்ளார்.
சோனம் கபூர், கரீனா கபூர், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் வீர் தி வெட்டிங். இந்த படத்தில் ஸ்வரா பாஸ்கர் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்திருந்தார்.
அந்த காட்சியை பார்த்துவிட்டு பலரும் அவரை கிண்டல் செய்தனர், கடுமையாக விமர்சித்தனர்.
பாராட்டு
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று கூறி 377-வது சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை ஸ்வரா பாஸ்கரின் தந்தையான சி. உதய் பாஸ்கர் பாராட்டி ட்வீட் போட்டிருந்தார். ஸ்வராவின் தந்தை இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் ஸ்வரா பற்றி கேள்வி எழுப்பினார்.
கேள்வி
வீர் தி வெட்டிங் படத்தில் ஸ்வரா பாஸ்கர் சுயஇன்பம் அனுபவித்த காட்சியின் புகைப்படத்தை போட்டு இது யார் சார், என்ன செய்கிறார்??? நான் குழப்பம் அடைந்தேன். ஸ்வராவின் மிகப்பெரிய ரசிகன் என்று உதய் பாஸ்கரிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
விளாசல்
யாரோ ஒருவர் தான் சுய இன்பம் அனுபவித்தது போன்று நடித்த காட்சி பற்றி தன் தந்தையிடம் கேட்டதை பார்த்த ஸ்வரா கோபம் அடைந்து அந்த நபரை விளாசியுள்ளார். ஸ்வரா தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, நான் ஒரு நடிகை. நான் வைப்ரேட்டர் பயன்படுத்துவது போன்று நடித்துள்ளேன். இதை நீங்கள் என் தந்தையிடம் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் என்னிடமே நேரடியாக கேட்கலாம். உங்களின் பெயரில் இருக்கும் வீரை நீக்கவிடவும். பெரியவர்களை அசிங்கப்படுத்த நினைப்பது வீரம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
கிண்டல்
ஸ்வராவின் ட்வீட்டை பார்த்த சிலர் அவரை கலாய்த்துள்ளனர். சிலர் அவரின் துணிச்சலை பாராட்டியுள்ளனர். அந்த படத்தை பார்க்கவில்லை ஆனால் உங்களில் தில்லான பதிலுக்காக பார்க்கப் போகிறேன் என்று எல்லாம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











