கணவர் சித்ரவதை: சொர்ணமால்யா புகார்

By Staff

நடிக்கக்கூடாது என்று கூறி தன்னைச் சித்ரவதை செய்வதாக நடிகை சொர்ணமால்யா தனது கணவர் அர்ஜூன் மீதுபோலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சித் தொகுப்பாளராக தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சொர்ணமால்யா.பின்பு அலைபாயுதே படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்துகிடைக்காததால், அர்ஜூன் என்ற அமெரிக்க மாப்பிள்ளையை மணந்து கொண்டு அமெரிக்கா சென்றார்.

ஒரு வருடம் அமெரிக்காவில் குடித்தனம் நடத்திய அவர் மீண்டும் சென்னை வந்தார். வந்த வேகத்தில்,கவர்ச்சியான உடைகளில் போட்டோக்கள் எடுத்துக் கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடத் தொடங்கினார்.

சினிமாவில் நடிப்பதற்கு கணவர் சம்மதித்து விட்டாரா என்ற கேள்விக்கு, என் முடிவுதான் அவரது முடிவும், அவர்கணவர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட என்று பதில் அளித்தார். விஜயகாந்துக்குத் தங்கையாக எங்கள்அண்ணாபடத்தில் நடித்தார்.

இந் நிலையில் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப்புகாரில், அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த என் கணவர் அர்ஜூன், சினிமாவில் நான் நடிக்கக் கூடாது என்றுசித்ரவதை செய்கிறார் என்று கூறியுள்ளார்.

புகாரில் உண்மையிருந்தால், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

இதற்கிடையே சொர்ணமால்யாவுக்கும், அவரது கணவருக்கும் சமரசம் செய்து வைக்க இருவரது உறவினர்களும்முயற்சி செய்து வருகிறார்கள்.

இப்போது சொர்ணமால்யா பெங்களூரில் இருக்கிறார்.

சுகன்யாவின் கணவருக்கு நோட்டீஸ்

சொர்ணமால்யாவைப் போல், அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்தவர்தான் நடிகை சுகன்யா.

திருமணமான 5 மாதத்தில் கணவரைப் பிரிந்து இந்தியா வந்த சுகன்யா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 2ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராகும்படி அமெரிக்காவில் உள்ள சுகன்யாவின் கணவர் ஸ்ரீதருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பாபிலோனாவின் கணவருக்கு நோட்டீஸ்

இதேபோல் விவாகரத்து கோரி நடிகை பாபிலோனா தாக்கல் செய்திருந்த மனுவுக்கு வரும் 31ம் தேதிநீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்குமாறு அவரது கணவர் அர்ஜூன்தாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னைகுடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X