Vijay: தமிழ் சினிமா வேண்டாமா? மலையாளத்துக்கு வாங்க தளபதி.. நாங்க இருக்கோம் சுவாசிகா பேச்சு!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய போது தான் இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்றும், தான் கமிட் ஆன படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்கப்போவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியையும் ஒரு வகையில் கவலையையும் உருவாக்கியது.

இப்படி இருக்கையில் நடிகை சுவாசிகா அண்மையில் கலந்து கொண்ட விருது நிகழ்ச்சி ஒன்றில், சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ள நடிகர் விஜய் சாரை, மலையாள சினிமாவுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். அங்கு நாங்கள் அவரை கொண்டாடுவோம் என்று தெரிவித்தார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Swasika Wants to Bring Vijay to Mollywood Surprise Statement Goes Viral

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடிக்கத் தொடங்கிய படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்திற்கான சென்சார் சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் சென்சார் தரப்பில் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து விட்டதால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளித்தாலும் தேர்தல் முடியும் வரை விஜய் படத்தை ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

எப்போது ரிலீஸ்: இப்படி இருக்கையில் படம் மே மாதமோ அல்லது ஜூன் மாதத்தில் அவரது பிறந்த நாளிலோ வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. தற்போது விஜய் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ரசிகர்கள் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருவதாகவும் கூறி வருகிறார்கள்.

Swasika Wants to Bring Vijay to Mollywood Surprise Statement Goes Viral

விஜய்: இப்படி இருக்கையில் நடிகை சுவாசிகா அண்மையில் கலந்து கொண்ட விருது நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் தமிழ் சினிமாவில் இருந்து ஒரு நடிகரை மலையாள சினிமாவுக்கு கடத்திக் கொண்டு செல்வீர்கள் என்றால் அது யாரை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், " சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ள நடிகர் விஜய் சாரை, மலையாள சினிமாவுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். அங்கு நாங்கள் அவரை கொண்டாடுவோம் என்று தெரிவித்தார். அவரது இந்த பதிலை பலரும் எதிர்பார்க்காததால் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X