பைலட் மாப்பிள்ளை… சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு டும் டும் டும்…!

ஸ்வாதிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது

ஹைதராபாத்: நடிகை ஸ்வாதி - விகாஸ்க்கு திருமணம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி. கண்கள் இரண்டால் பாடலில் ஜெய்யின் சைட்டுக்கு ரியாக்‌ஷன் கொடுத்து நமக்கு கழுத்து வலி வரவைத்ததன் மூலம் பிரபலமானார்.

Swathi got married!

அதன் பிறகு, கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மலேஷிய ஏர்லைன்சில் பைலட்டாக உள்ள விகாஸ் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் பரவியது. ஆமா நாங்கள் காதலித்தது உண்மைதான் என உரக்கச் சொல்லுமளவிற்கு தற்போது ஹைதராபாத்தில் டும் டும் டும் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திரைத்துரையிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை. கொச்சியில் நாளை திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அதில் திரைத்துறையினர் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக நடிகைகள் என்றால் தொழிலதிபரை திருமணம் செய்வார்கள் என்பதற்கு மாற்றாக ஸ்வாதி பைலட்டை திருமணம் செய்துள்ளார். பைலட் என சாதரணமாக நினைக்காதீர்கள், விகாஸுக்கு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சொந்த வீடு உள்ளதாம். இந்த அழகிய ஜோடியின் திருமண வாழ்க்கை டேக் ஆஃப் ஆக வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Read more about: actress நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X