விக்ரம் படத்தின் புதிய இணைப்பு... காளிதாசுக்கு ஜோடியாகும் ஸ்வாதிஷ்டா

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் படம் விக்ரம்.

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் முக்கிய ரோலில் நடித்துவரும் காளிதாஸ் ஜெயராமிற்கு ஜோடியாகும் நடிகை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. படத்தின் 2 ஷெட்யூல்கள் நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. மிரட்டலான வகையில் காட்சியமைப்புகளை மேற்கொண்டு வருகிறார் இயக்குநர்.

முக்கிய ரோலில் காளிதாஸ்

முக்கிய ரோலில் காளிதாஸ்

படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது தந்தை ஜெயராம் கமலுடன் இணைந்து பஞ்ச தந்திரம், தெனாலி, உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் கமலுடன் இணைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

காளிதாஸ் ஹீரோவாக நடித்திருந்த மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த பாவக்கதைகள் தொடரில் சுதா கொங்குரா இயக்கத்தில் தங்கம் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் காளிதாஸ்.

படத்தில் இணைந்த ஸ்வாதிஷ்டா

படத்தில் இணைந்த ஸ்வாதிஷ்டா

இந்த கேரக்டர் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே விக்ரம் படத்தில் முக்கிய ஹீரோக்களுடன் இவர் இணைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தில் காளிதாசுக்கு ஜோடியாகவுள்ளார் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.

ஸ்வாதிஷ்டா மகிழ்ச்சி

ஸ்வாதிஷ்டா மகிழ்ச்சி

இவர் ஜடா, சவரக்கத்தி, கீ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்களிலும் நடித்துள்ள இவர் மாடலாக தன்னுடைய கேரியரை துவக்கியவர். சவரக்கத்தியில் இவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசனின் படத்தில் இணைந்துள்ளது குறித்து இவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அனிருத் இசை

அனிருத் இசை

விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சர்க்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வித்தியாசமான கமல்

வித்தியாசமான கமல்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான கமலை பார்க்க முடிகிறது. சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக்கில் இதை உணர முடிந்தது. லோகேஷ் கனகராஜ் மீதும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X