திருமணத்திற்கு பிறகு ஆந்தாலஜி திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!
சென்னை : தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகை சுவாதி.
தமிழில் சுப்ரமணியபுரம் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் நடிக்காமல் வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த சுவாதி இப்பொழுது ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றில் நடித்து சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

சிறந்த நடிகையாக
சில நடிகைகள் மட்டும் எந்தக் காரணமும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்துவிடும் அந்த வரிசையில் நடிகை சுவாதி வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ரசிக்கக்கூடிய மிகச் சிறந்த நடிகையாக உள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அலட்டிக்கொள்ளாத நடிப்பை
சசிகுமார் நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சுவாதி முதல் படத்திலேயே அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

பின் தொடரும் ரசிகர்கள்
கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி,எட்சன், யாக்கை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இன்றுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டியதில்லை. இதனாலேயே இவரை பின் தொடரும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

சினிமாவுக்கு ரீ என்ட்ரி
கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாதி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தால், இப்பொழுது மீண்டும் நடிக்கத் தொடங்கி படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் தெலுங்கில் பஞ்சதந்திரம் என்றால் ஆந்தாலஜி படத்தில் நடித்து சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹர்ஷா புலிப்புகா இயக்குகிறார், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











