ச்சோ ஸ்வீட்... குட்டி தேவதையை மனம்திறந்து பாராட்டிய இசைப்புயல்
மும்பை : ஏஆர் ரஹ்மானின் தயாரிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ளது 99 திரைப்படம்.
இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஆகாய நீலங்களில் பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாடலை பாடிய குட்டி தேவதைக்கு ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இசைப்புயலின் புதிய அவதாரம்
தன்னுடைய இசையால் சர்வதேச அளவில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுவரும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் கையில் எடுத்துள்ளார். 99 படத்தை தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இசையையும் சிறப்பாக செய்துள்ளார்.

கொள்ளை கொண்ட பாடல்
இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. குறிப்பாக ஆகாய நீலங்களில் என்ற பாடல் ஷ்ரேயா கோஷல் மற்றும் ஏஆர் ரஹ்மானின் கூட்டு முயற்சியில் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளது. யூடியூப் உள்ளிட்ட பக்கங்களிலும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் அதிகமான லைக்குகளை அள்ளி வருகிறது.

மலையாள ஸ்கிரிப்ட் ரைட்டர்
இந்நிலையில் இந்தப் பாடல் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் மிகவும் பேவரிட் என்று மலையாள ஸ்கிரிப்ட் ரைட்டர் விவேக் ரஞ்சித் பாராட்டு தெரிவித்துள்ளார். பாடல் வெளிவந்தது முதலே தங்களின் விருப்பத்திற்குரியதாக அந்த பாடல் மாறிவிட்டதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#AagayaNeelangalil has been an instant fav for me and wife ever since it came out. And today our daughter Rukmini surprised us by singing this. And she's just going to turn 3 years old next month. arrahman shreyaghoshal #99Songs ❤️❤️❤️ pic.twitter.com/8d1DIN9RwA
— Vivek Ranjit (vivekranjit) May 15, 2021
பாடலை பாடிய தேவதை
இதில் முக்கியமான ட்விஸ்ட் என்னவென்றால், அவருடைய 3 வயதுகூட நிரம்பாத பெண் குழந்தை ருக்மணி, அந்த பாடலை பாடி அசத்தியதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த அளவிற்கு இசைப்புயலின் பாடல் குழந்தைகளையும் கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஏஆர் ரஹ்மான் பாராட்டு
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மிகவும் இனிமையாக உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். அவர் கூறியது போலவே அந்த குட்டி தேவதையின் வாய்சில் அந்த பாடலை கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











