உள்ளாடை குறித்த சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட பாலிவுட் நடிகை
மும்பை : உள்ளாடையை கடவுளுடன் இணைத்து சர்ச்சைக்குரிய பேச்சை பேசியிருந்தார் பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி.
இவரது சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய பிரசதேச அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தன்னுடைய பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் தான் அதுகுறித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி
பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரி பாலிவுட் படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து வருவதுடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். 41 வயதான இவர் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். கடந்த 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ஸ்வேதா.

சர்ச்சை பேச்சு
இந்நிலையில் தற்போது இவர் ஷோ ஸ்டாப்பர் என்ற தொடரில் கமிட்டாகியுள்ளார். இதன் விளம்பர நிகழ்ச்சிக்காக செய்தியாளர்களை சந்தித்த இவர், கடவுள் தனது ப்ரா சைசை அளவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். காமெடிக்காக இவர் தெரிவித்த இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேச அரசு இந்த ஸ்டேட்மெண்ட் குறித்து 24 மணிநேரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில கமிஷனரிடம் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து ஸ்வேதாவிற்கு பல்வேறு கண்டனங்களும் எழுந்துள்ளன.

ஸ்வேதா மன்னிப்பு
இந்நிலையில் தன்னுடைய ஸ்டேட்மெண்ட் குறித்து ஸ்வேதா தற்போது அறிக்கை மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னுடைய கருத்து யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும்வகையில் பேசப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புண்படுத்தும் நோக்கம் இல்லை
கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள என்போன்ற ஒருத்தி இதுபோன்ற கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய செயல்பாடுகளோ வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதுகுறித்து தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷோ ஸ்டாப்பர் நிகழ்ச்சி
ஷோ ஸ்டாப்பர் என்ற வெப் நிகழ்ச்சிக்கான விளம்பர நிகழ்ச்சியில் பேசும்போதுதான் ஸ்வேதா இத்தகைய கமெண்ட்டை தெரிவித்திருந்தார். இதில் அவருடன் மகாபாரதம் டிவி தொடரில் நடித்திருந்த சௌரப் ராஜ் ஜெயின் மற்றும் திகாங்கனா சூர்யவன்சி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











