ஸ்வேதா பாசுவுடன் இருந்த பிரபல தொழிலதிபர் யார்? இன்று தெரியும்!

By Mayura Akilan

ஹைதராபாத்: ஹைதராபாத்தில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கடந்த வாரம் நடிகை ஸ்வேதாபாசு கைது செய்யப்பட்டார். அவரை 2 மாதங்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் கைதானபோது அவருடன் தங்கியிருந்த தொழிலதிபர் யார் என்ற தகவலை இன்று சுவேதாபாசு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஸ்வேதா பாசு, குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தேசிய விருது வாங்கியுள்ளார். மேலும் தெலுங்கு, இந்திப் படங்களில் படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, தமிழில் கருணாசுடன் ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் போலீசார் ஹைதராபாத் ஹோட்டலில் நடத்திய ரெய்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஸ்வேதாபாசு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்கியுள்ளார்.

சாப்பிட மறுக்கும் ஸ்வேதா

சாப்பிட மறுக்கும் ஸ்வேதா

பணம் இல்லாததால் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறிய ஸ்வேதா பாசு தற்போது மிகவும் கவலையுடன் உள்ளார். தனது வாழ்க்கை திசைமாறியதை நினைத்து வேதனைப்படுவதாகவும், சாப்பிட மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் மனுதாக்கல்

நீதிமன்றத்தில் மனுதாக்கல்

இந்நிலையில் மகளின் நிலை கண்டு கலங்கியுள்ள ஸ்வேதா பாசுவின் பெற்றோர், தங்களிடம் ஸ்வேதா பாசுவை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மனரீதியாக பாதிப்பு

மனரீதியாக பாதிப்பு

அந்த மனுவில் "ஸ்வேதாவை எங்களிடம் ஒப்படையுங்கள். மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநிலை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த சூழலில் அவளுக்கு எங்கள் அன்பு தேவை. அவளை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

தொழிலதிபர் யார்?

தொழிலதிபர் யார்?

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதற்கிடையில் ஸ்வேதா பாசுவுடன் இருந்த தொழிலதிபர் யார் என்பதையும் போலீசார் வெளியிட வேண்டும் என்று ஆந்திராவில் மகளிர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X