‘துணை முதல்வர்’ பாக்யராஜின் ஜோடியாகும் ஸ்வேதா மேனன்

சென்னை: பரபரப்புகளுக்குப் பெயர் போன கேரள நடிகை ஸ்வேதா மேனன் தமிழில் பாக்யராஜ் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

சிலகாலம் சினிமா இயக்கத்தில் இருந்து விலகி இருந்த பாக்யராஜ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் தான் அவரது ஜோடியாக நடிகை ஸ்வேதாமேனன் அணுகி இருக்கிறார்களாம்.

இதற்கு முன்னர், அரவாணிப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஸ்வேதா மேனன் நடித்திருந்தார். இது அவருடைய நேரடி இரண்டாவது தமிழ்ப் படம் எனலாம்.

துணை முதல்வர்...

துணை முதல்வர்...

சித்து பிளஸ் டூ படத்துக்குப் பிறகு பாக்யராஜின் கதை, திரைக்கதை வசனம் மற்றும் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘துணை முதல்வர்'.

அரசியல் நைய்யாண்டிப்படம்...

அரசியல் நைய்யாண்டிப்படம்...

துணை முதல்வர் என்ற தலைப்பைப் பார்த்தாலே அரசியல் நையாண்டி படம் இது என யூகிக்க முடிகிறது. இப்படத்தில் பாக்யரா‌ஜ் ஜோடியாக நடிக்க ஸ்வேதா மேனனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

நிஜ பிரசவக் காட்சி....

நிஜ பிரசவக் காட்சி....

சமீபகாலமாக அதிகம் பரபரப்புச் செய்திகளில் அடிபட்டவர் ஸ்வேதாமேனன். முதலில், களிமண்ணு படத்துக்காக தனது நிஜ பிரசவக் காட்சியை படமாக்க அனுமதித்ததன் காரணமாக சர்ச்சைக்குள்ளானார்.

அடுத்த சர்ச்சை...

அடுத்த சர்ச்சை...

அதனைத் தொடர்ந்து, மூத்த காங்கிரஸ் தலைவர் பொது இடத்தில் அத்துமீறி பாலியல் குறும்பு செய்ததற்காக அவர் மீது புகார் தந்து பரபரப்பைக் கிளப்பியவர் ஸ்வேதா மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X