ஒருவழியா ஆரம்பிச்சாச்சு... டிசம்பர் 6 முதல் 'சைரா' ஷூட்டிங்!
ஐதராபாத் : சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா என இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகர்கள் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சரித்திரப் படம் 'சைரா'.
ஆந்திராவை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'சைரா' படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் ஷூட்டிங் தாமதமாகி வந்த நிலையில், வரும் டிசம்பர் 6-ம் தேதி ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.

6-ம் தேதி ஷூட்டிங்
பிரம்மாண்ட சரித்திரப் படமாக 150 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள 'சைரா' படம் கால தாமதமாகிக் கொண்டே செல்வது சிரஞ்சீவியின் ரசிகர்களை வருத்தமடைய வைத்தது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மான் விலகல்
இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அப்போதே அறிவிக்கப்பட்டிருந்தார். 'சைரா' படத்திற்கு முன்பே பணிபுரிவதாக சம்மதித்த படங்களின் பணிகள் அதிகமாக இருப்பதால் இப்படத்திலிருந்து விலகுவதாகவும், விலகுவதும் வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் விலகல்
'சைரா ' படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்ட ரவிவர்மன் அப்படத்திலிருந்து சில வாரங்களிலேயே வெளியேறினார். அவருக்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தாமதமே காரணம்
திட்டமிட்டபடி படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறாததே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படத்திலிருந்து வெளியேறியதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

200 பிரிட்டிஷ் நடிகர்கள்
சுதந்திர போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் நடிகர்கள் நடிக்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஷூட்டிங் ஆரம்பம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6-ம் தேதி முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள செட்டில் தொடங்குகிறது. ஒரு வாரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்த பிறகு, படமாக்கிய காட்சிகளை எடிட் செய்து பார்வையிடுகிறார் சிரஞ்சீவி. அதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக, தான் நடித்து வரும் ரங்கஸ்தலம் படத்திற்கு 10 நாட்கள் பிரேக் கொடுத்துள்ளார் ராம்சரண்.


Click it and Unblock the Notifications











