போட்ட பணத்தை எடுப்பதே கஷ்டம்.. சிக்கலில் சிரஞ்சீவி.. சைரா நரசிம்ம ரெட்டிக்கு சோதனை மேல் சோதனை!
பெரிய பட்ஜெட்டில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் வசூல் விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: பெரிய பட்ஜெட்டில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் வசூல் விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சைரா நரசிம்ம ரெட்டி படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியானது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று இந்த படம் வெளியானது.
நடிகர் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா ஆகிய பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். சிரஞ்சீவி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு எப்படி
ஆந்திராவில் இந்த படம் மோசமான விமர்சனம் எதையும் பெறவில்லை. ஆனால் ஆந்திரா தவிர மற்ற மொழிகளில் படத்தின் விமர்சனங்கள் மோசமாக வெளியாகி வருகிறது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. நாடகம் போல இருக்கிறது என்று விமர்சனம் வெளியாகிறது வருகிறது.

போட்டிக்கு வந்த படம்
அதேபோல் சைரா நரசிம்ம ரெட்டி உடன் இன்னும் இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியில் ஹிர்த்திக் ரோஷன் நடித்த வார் படம் வெளியாகி உள்ளது. அதேபோல் ஹாலிவுட் படமாக ஜோக்கர் படம் வெளியாகி இருக்கிறது.

ஜோக்கர் எப்படி
இதில் ஜோக்கர் படம் இந்தி மற்றும் தமிழில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பெங்களூரிலும் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கான கூட்டம் அதிகரித்துள்ளது.

சைரா நரசிம்ம ரெட்டி போச்சு
இதனால் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் வசூல் மோசமாக குறைந்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் ஆகும். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. அங்கு மொத்தமாக இந்த படம் 25 கோடி ரூபாயை முதல் நாள் வசூல் செய்துள்ளது.

ஆனால் என்ன
ஆனால் தமிழகத்தில் முதல்நாள் இந்த படம் 95 லட்ச ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. சென்னை தவிர வேறு எங்கும் பெரிதாக இந்த படம் வரவேற்பை பெறவில்லை. மற்றபடி வட மாநிலங்களில் மொத்தமாக 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

சிக்கல்
இந்த படத்தின் பட்ஜெட் அதிகம். அடுத்த வாரம் அசுரன் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற படங்கள் வெளியாக உள்ளது. அதனால் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் வசூல் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே படம் போட்ட பட்ஜெட்டை எடுக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











