சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - ரசிகர்கள் ஆறுதல்

Recommended Video

சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி பட செட்டில் பயங்கர தீ விபத்து- வீடியோ

சென்னை: சயீரா நரசிம்ம ரெட்டி படம் குறித்த நேரத்தில் அதாவது அக்டோபர் 2ஆம் தேதி நிச்சயம் வெளியாகும் என்றும் தாமதம் ஆகும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் வதங்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு தன்னுடைய சொந்த தயாரிப்பில் பிரமாண்டமான படைப்பாக சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை சிரஞ்சீவி உருவாக்கி வருகிறார்.

Sye Raa Narasimha Reddy film will be released on time

அதோடு, அரசியலுக்கு குட்பை சொன்ன பின்பு எடுக்கப்பட்ட கைதி நம்பர் 150 படத்தின் அபார வெற்றி கொடுத்த உற்சாகத்தில், தன்னுடைய 151ஆவது படத்தையும் வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற முனைப்போடு சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து எடுக்கப்படும் படம். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, நிஹாரிக்கா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படம், ஆந்திராவில் வாழ்ந்த யாருமே அறிந்திடாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் வாழ்க்கையை பற்றியது என்பதால், இதை தன்னுடைய லட்சியப் படமாக நினைத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் மெகா பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்களும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

Sye Raa Narasimha Reddy film will be released on time

இந்நிலையில், சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என்ற ஆதாரமற்ற வதந்தி பரவுவதால் ரசிகர்கள் கவலைப்படத்தொடங்கியுள்ளனர் பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் வதந்தியை பரப்பியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் பி.ஆர் குழு எந்த நேரத்திலும் வதந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் கவலைப்படும் மெகா ஸ்டார் சிரஞ்சீவின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் மீண்டும் ஒத்தி வைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் என்று கூறியுள்ளனர். மொத்தத்தில், இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இப்போது சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்த திரைப்படம் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகர் டைகர் ஷிராப்பின் ஹிந்தி திரைப்படமான வார் உடன் போட்டியிட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X