சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2ல் ரிலீஸ் - யு/ஏ சான்றிதழ்
சென்னை: சிரஞ்சீவி நடித்த சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்திற்கு எந்த கத்திரியும் போடாமல் யு/ஏ சர்டிபிக்கேட் வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சிரஞ்சீவி அரசியல் துறவரம் மேற்கொண்ட பிறகு நடித்து வெளியான 150ஆவது படமான கைதி நம்பர் 150 சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து எங்கே தன்னை ஆந்திர ரசிகர்கள் உதாசீனப்படுத்திவிடுவார்களோ என்று தயக்கத்திலேயே இருந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கைதி நம்பர் 150 படத்தின் வெற்றி உற்சாகமளிப்பதாக அமைந்தது.

இந்த வெற்றியை அடுத்து, குஷியான சிரஞ்சீவி அடுத்ததாக நடிக்கும் 151ஆவது படமும் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் படமாக இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு அடுத்து நடிக்க திட்டமிட்ட படத்தின் கதையை தேட ஆரம்பித்தார்.
அப்பொழுது அவருக்கு அமைந்தது தான், யாருமே அறிந்திடாத ஆந்திராவின் சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற வீரரின் கதை. அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததால், தானே அந்த கதையை படமாக தயாரித்து நடிக்க முடிவெடுத்து உடனடியாக செயலில் இறங்கிவிட்டார். அது தான் சயீரா நரசிம்ம ரெட்டி.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மெகா நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுஏ சென்சார் சர்டிபிக்கேட் கொடுத்துள்ளனர். அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி ராம் சரண் தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 200 கோடி ரூபாய் என்று திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு ரத்னவேலு, இசை அமைத்தவர் அமித் திரிவேதி. இப்படத்தின் பாடலும், டீசரும் வெளியாகி ரசிகர்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் கதை எழுதியது பருச்சுரி பிரதர்ஸ். சயிராவின் வசனங்களை சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார். இந்த அதிரடி ஹிஸ்டாரிக்கல் திரில்லர் திரைப்படத்தின் ஸ்டண்ட் கிரெக் பவல், லீ விட்டேக்கர் கையாளுகிறார்கள்.
விடுதலை போராட்ட வீரரைப்பற்றிய இந்த திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியும் நீக்கப்படவில்லையாம். அனைவரும் பார்க்கும் வகையில் யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுனிதி சவுகான், ஸ்ரேயா கோஷல் மற்றும் அமித் திரிவேதி ஆகியோர் பாடிய சயிரா என்ற டைட்டில் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல படமும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











