For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரஞ்சீவியின் சயிரா நரசிம்ம ரெட்டி மேக்கிங் வீடியோ இன்று ரிலீஸ் – ச்சும்மா அதிரும்ல

|

சென்னை: சயீரா நரசிம்ம ரெட்டி படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றிய மேக்கிங் வீடியோ இன்று மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படுகிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிரஞ்சீவி நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஆந்திரா சட்டசபையில் தனக்கென சில இடங்களைப் பிடித்தார். சில ஆண்டுகளில் கட்சி போனியாகாததால், காங்கிரஸ் உடன் பிரஜா ராஜ்ஜியத்தை இணைத்தார்.

முதல்வர் ஆசையில் இருந்த அவருக்கு கிடைத்தது ராஜ்யசபா எம்பி பதவிதான். சில காலம் மத்திய அமைச்சராகவும் இருந்தார். எல்லாம் 2014 வரைதான். படிப்படியாக அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கிய சிரஞ்சீவி சினிமாவின் பக்கம் கவனத்தை திருப்பினார்.

சினிமாவில் மீண்டும் சிரஞ்சீவி

சினிமாவில் மீண்டும் சிரஞ்சீவி

நீண்ட இடைவெளிக்கு பின்பு 2017ஆம் ஆண்டு கைதி நம்பர் 150 என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருடைய 150ஆவது படம் என்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.

150வது படம்

150வது படம்

150ஆவது படம் வெற்றி பெற்றதை அடுத்து உற்சாகமான சிரஞ்சீவி மீண்டும் தெலுங்கு சினிமாவில் களமிறங்கி ஒரு ரவுண்டு வர முடிவெடுத்தார். இதனையடுத்து வரலாற்று பின்னணி கொண்ட கதையில் நடிக்க தயாரானார்.

சுதந்திர போராட்ட போராளி

சுதந்திர போராட்ட போராளி

வரலாற்று பின்னணி என்ற உடன் அலசி ஆராய்ந்ததில் யாருமே அறிந்திடாத சுதந்திரப் போராட்ட போராளியான சயீரா நரசிம்ம ரெட்டியின் வரலாற்றை படமாக்க முடிவெடுக்கப்பட்டது.

சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மகன் தயாரிப்பில் அப்பா

மகன் தயாரிப்பில் அப்பா

மெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ராமச்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

மெகா நட்சத்திர பட்டாளங்கள்

மெகா நட்சத்திர பட்டாளங்கள்

பாலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

புரட்சி நாயகன் சயீரா நரசிம்ம ரெட்டி

புரட்சி நாயகன் சயீரா நரசிம்ம ரெட்டி

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு படம் என்றாலே மாஸ் என்று அனைவருக்கும் தெரியும். அதுவும் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அந்தப் படத்தில் டான்ஸ், ஃபைட் என அனைத்துமே பட்டையை கிளப்பும் என்பதால், சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேக்கிங் வீடியோ ரிலீஸ்

மேக்கிங் வீடியோ ரிலீஸ்

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி. இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் தயாரிப்பு வீடியோ நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாலை தேதி மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அதை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகமே காத்துக்கொண்டிருக்கிறது.

English summary
Telugu Mega Star Chiranjeevi acted Historical story, the Sye Raa Narasimha Reddy film making video will be released on today evening.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more