இதுக்கு ஏன் இவ்வளவு பட்ஜெட்.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.. சைரா நரசிம்ம ரெட்டி நெட்டிசன்ஸ் ரிவ்யூ!
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படம் மிக மோசமான ரிவ்யூவை பெற்று வருகிறது.
Recommended Video
சென்னை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படம் மிக மோசமான ரிவ்யூவை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமா உலகில் சைரா நரசிம்ம ரெட்டி இன்னொரு பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகி உள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தியா முழுக்க இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று படம்
இந்த படம் இன்று வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து மோசமான ரிவ்யூக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. படத்தை பார்த்த பலர் படம் நன்றாக இல்லை. மிகவும் மோசம் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

என்ன நீளம்
படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் படத்தின் கதையும் சரியில்லை. திரைக்கதை படு மோசமாக இருக்கிறது. நடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மோசமாக உள்ளது, என்று நிறைய நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

ஆனால் என்ன
படத்தில் நன்றாக இருக்கும் விஷயம் என்றால் சினிமோட்டோகிராபி மட்டுமே. ஆனால் பிஜிஎம் அதையும் கெடுத்து விடுகிறது. பிஜிஎம் தலைவலி கொடுக்கும் வகையில் இருக்கிறது .

எப்படி இருக்கிறது
படத்தில் சில சண்டை காட்சிகள் நன்றாக உள்ளது. வசனங்கள் நன்றாக இருக்கிறது. சில மாஸான காட்சிகள் இருப்பதும் நன்றாக இருக்கிறது. இரண்டு ஹீரோயின்கள் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அட போங்க
இந்த படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் போட்டு ஏன் வீணடித்தார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக சிரஞ்சீவி ரோல் சரியாக இல்லை. அவரின் வயதும் தோற்றமும் படத்திற்கு ஏற்றதாக இல்லை. மிகவும் குண்டாக தெரிகிறார், என்று நெட்டிசன்கள் விமர்சனங்கள் வைத்துள்ளனர்.

மிக மோசம்
பாகுபலி வெற்றியை தொடர்ந்து சிரஞ்சீவி தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்துவிட்டார் என்றும் பலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள். முதல் நாளே படத்தின் விமர்சனங்கள் மோசமாக வெளியாக துவங்கி உள்ளது. இதனால் படம் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











