twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சயீரா நரசிம்ம ரெட்டி ப்ரஸ் மீட்: அப்பா சிரஞ்சீவியின் கனவை நனவாக்கிய மகன் ராம்சரண் தேஜா

    |

    சென்னை: சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, சயீரா படத்தை தயாரிப்பது என்பது என்னுடைய கனவு திட்டமாகும். அது இப்போது நனவாகி உள்ளது. என்னுடைய மகன் ராம் சரண் நடித்த இரண்டாவது படமான மகதீரா படத்திலேயே அவர் ஹிஸ்டாரிக்கல் காஸ்டியூம் போட்டு அசத்திவிட்டார். அதைப்பார்த்து எனக்கு பொறாமையாக இருந்தது. இப்படி ஒரு காஸ்டியூம் போட்டு அசத்திய ராம் சரணை பார்க்க எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் அதை மனதில் கொண்டு இந்த மாதிரியான ஒரு வரலாற்றுப் படத்தை தயாரிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ராம் சரணைப் பற்றி பெருமை பொங்க பேசினார்.

    சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் சயீரா நரசிம்ம ரெட்டி. பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன், டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சுதீப், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன் தாரா, தமன்னா என் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் முதல் சுதந்திரப் போராட்ட வீரனின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

    பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிரஞ்சீவின் மகன் ராம் சரண் தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணியை ஸ்ரீகர் பிரசாத் கையாளுகின்றார். சயீராவின் கதையை பருச்சுரி பிரதர்ஸ் எழுதியுள்ளார். படத்தின் வசனங்களை விஜய் பாலாஜி கூர் தீட்டி செதுக்கியுள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது ஒரு பேன் இந்தியா திரைப்படம். அதாவது உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு, இந்தி என இல்லாமல் அனைத்து மொழி பேசும் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா, இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

     என் மீது இசைஞானிக்கு கோபமா? இல்லை என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி என் மீது இசைஞானிக்கு கோபமா? இல்லை என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி

    தந்தைக்கு மகன் கொடுத்த பரிசு

    தந்தைக்கு மகன் கொடுத்த பரிசு

    இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது, ஒரு மகன் தனது தந்தைக்கு குடுத்த மிகப்பெரிய பரிசு இது தான். இந்த மாதிரியான பரிசை குடுத்தது மிகப்பெரிய விசயம். எத்தனையோ பரிசுகளை மகன் தனது தந்தைக்கு குடுத்திருப்பார்கள். ஆனால், ராம் சரண் அவரது தந்தையை அணு அணுவாக அழகாக ரசித்து இந்த சினிமாவின் மூலம் அவரது அன்பை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளார். ராம் சரண் இப்படி ஒரு படம் பண்ணியதற்கு மிக்க நன்றி என்றும் இதற்காக நாம் ராம் சரணுக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று கூறினார்.

    சிரஞ்சீவியோடு நடிக்க பயம்

    சிரஞ்சீவியோடு நடிக்க பயம்

    இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி தமன்னா பேசுகையில், இப்படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரையுலகின் பெரிய நட்சத்திரங்களோடு இணைந்து பணிபுரிந்தது ஒரு மகிழ்ச்சியான தருணம். சிரஞ்சீவியோடு நடிக்கையில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதுவும் அவரது பெரிய கண்களை பார்த்தாலே நான் மிரண்டுவிடுவேன். ஒரு மூத்த கலைஞராக இருப்பினும் மிகவும் ஒழுக்கமான, அடக்கமான தாழ்மையான மனிதராக இருக்கிறார். அவரை பார்த்து நாம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    முக்கியமான படம்

    முக்கியமான படம்

    சயீரா படத்தில் நானும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் உள்ளன. நங்கள் இருவரும் இணைந்து நடித்த அந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்களும் அந்த காட்சிகளை பெரிதும் விரும்புவர். என் திரை வாழ்வில் இப்படம் மிகவும் முக்கியமான படம். இப்படம் ஒரு தேசபக்தி நாளான காந்தி ஜெயந்தி அன்று வெளியாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றார் தமன்னா.

    கடவுள் கொடுத்த வரம்

    கடவுள் கொடுத்த வரம்

    ராம் சரண் பேசும்போது, இந்த திரைப்படத்தை நான் தயாரித்ததற்கு என் அப்பா சிரஞ்சீவி தான் கரணம் என்றும் எல்லாம் கடவுள் குடுத்த வரம் என்று கூறினார். நான் விஜய் சேதுபதியின் ரசிகன். எளிமையாக நடிப்பார். அவரது 96 படம் பார்த்த போது பல காட்சிகளில் கண்ணீர் வந்தது. ஆனால் படத்தில் நடித்த விஜய் சேதுபதி ஒரு காட்சியில் கூட கண்ணீர் விடவில்லை. அதை பற்றி ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டேன் என்றார். படத்தில் நடித்த நடிகைகள் தமன்னா, நயன்தாரா, நடிகர்கள் அமிதாப்பச்சன் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானது. அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

    கமலுக்கு நன்றி

    கமலுக்கு நன்றி

    படத்தின் நாயகன் சிரஞ்சீவி பேசும்போது, தமிழில் எனக்காக பின்னணி(Voice over) கொடுத்த கமல்ஹாசனுக்கு நன்றி. நான் முதன் முதலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சென்னையில், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையேறி பேசுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சயீரா படத்தை தமிழ்நாட்டில் சூப்பர் குட்ஸ் நிறுவனத்தின் ஆர்.பி சவுத்ரி வெளியிடுவது சந்தோசமான விஷயம்.

    சயீரா கனவு திட்டம்

    சயீரா கனவு திட்டம்

    சயீரா படத்தை தயாரிப்பது என்பது என்னுடைய கனவு திரைப்படமாகும். இது இப்போது நனவாகி உள்ளது. 12 ஆண்டு கனவு இப்போது நனவானதுக்கு காரணம் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இருந்தாலும் நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த படத்தைப் பற்றி பேசும்போது முக்கியமான ஒன்றை சொல்லியே ஆகவேண்டும்.

    ராம் சரணை பார்த்து பொறாமை

    ராம் சரணை பார்த்து பொறாமை

    என்னுடைய மகன் ராம் சரண் நடித்த இரண்டாவது படமான மஹதீரா படத்திலேயே அவர் ஹிஸ்டாரிக்கல் காஸ்டியூம் போட்டு அசத்திவிட்டார். அதைப்பார்த்து எனக்கு பொறாமையாக இருந்தது. இப்படி ஒரு காஸ்டியூம் போட்டு அசத்திய ராம் சரணை பார்க்க எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் அதை மனதில் கொண்டு இந்த மாதிரியான ஒரு வரலாற்றுப் படத்தை தயாரிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ராம் சரணைப் பற்றி பெருமை பொங்க பேசினார்.

    நானே தயாரிக்கிறேன்

    நானே தயாரிக்கிறேன்

    சயீரா படத்தைப் பற்றி பேசும்போது, இவ்வளவு பெரிய ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்ட் படத்தை தயாரிக்க யார் முன்வருவார்கள் என்று தயங்கியபோது, நானே தயாரிக்கிறேன் என்று தைரியமாக ராம் சரண் சொன்னார். அப்படி உருவானது தான் இந்த சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம்.

    பேன் இந்தியா படம்

    பேன் இந்தியா படம்

    தமிழ் படங்கள் சிலவற்றை தெலுங்கு ரீமேக்கில் நான் நடித்திருக்கிறேன். அந்த படங்களெல்லாமே பயங்கர ஹிட்டானது. அதே மாதிரி நான் நடித்த தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் பண்ணினால் மக்களும் ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ என்ற பயமும் இருந்தது. ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தனித்தனியாக பிரிக்க முடியாத மொழிகளை தாண்டி எல்லோரும் கொண்டாட வேண்டிய ஒரு பேன் இந்திய திரைப்படம் என்று குறிப்பிட்டு பேசினார்.

    விஜய் சேதுபதி ரொம்ப சிம்பிள்

    விஜய் சேதுபதி ரொம்ப சிம்பிள்

    தெலுங்கு சினிமாவில் என்னை ரொம்ப சிம்பிளான மனிதர் என்று சொல்வார்கள். ஆனால் என்னை விட விஜய் சேதுபதி ரொம்ப ரொம்ப சிம்பிளான மனிதர். இவ்வளவு சிம்பிளான மனிதரை நான் பார்த்ததில்லை என்று, விஜய் சேதுபதியை பாராட்டி தள்ளிவிட்டார் சிரஞ்சீவி. நான் கேட்டதற்காக என்னுடன் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார் சிரஞ்சீவி.

    English summary
    Speaking at a press conference of Sye Raa Narasimha Reddy's film, actor Chiranjeevi said, My dream project is to produce the movie 'Sye Raa Narasimha Reddy'. It has come to fruition now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X